சாமியாருக்கு ஒரு மணப்பெண்

Foreign translations> சாமியாருக்கு ஒரு மணப்பெண்
Ashokamitran.jpg

சாமியாருக்கு ஒரு மணப்பெண்

அசோகமித்திரன்

Ashokamitran

Ashokamitran.jpg
ganenshan V.jpg

Ein Asket heiratet

Übersetzt von : Übersetzt von Vridhagiri Ganeshan aus Tamizh)

Translated by : Vridhagiri Ganeshan

ganenshan V.jpg

"ஜூலியன் சாமி கல்யாணம் பண்ணிண்டுடுத்தாமே?" ரகுநாத்ராவ் சொன்னான். எனக்குத் தெரியும். "அப்படியா?" என்றேன்.

"Julian Swami hat geheiratet!", sagte Raghunath Rao. Obwohl ich es schon wusste, fragte ich: "Wirklich?"

"கான்பூர்லேயோ லக்னோலியோ ஒரு முஸ்லிமைப் பண் ணிண்டுடுத்தாம்." இதையும் ரகுநாத்ராவ் வெறும் தகவலாகத் தான் சொன்னான். விமரிசனமாக அல்ல.

"Es hat in Kanpur oder Lucknow eine Moslemfrau geheiratet". sagte Raghunath Rao. Diese Mitteilung war lediglich als Information und nicht als Kommentar gedacht.

"இரண்டு ஊரும் இல்லை. ஆக்ராவிலே, அப்புறம் அந்தப் பொண் முஸ்லிம் இல்லை. அவ ஒரு சிந்திப் பொண்"

"Es war weder in Kanpur noch in Lucknow, sondern in Agra. Außerdem ist die Frau keine Moslem-Frau, sie ist eine Sindhi-Frau.

"அப்போ உனக்குத் தெரியுமா?"

"Ach, du hast es schon gewusst?"

"நானும் கேள்விப்பட்டதுதான். கிஷன்சந்த்பாய்தான் சொன்னார்."

"Ich habe es auch nur gehört. Kishan Chand Bhai erzählte es mir.

"இனிமே அது இந்தப் பக்கமெல்லாம் வருமா,அங்கேயே இருந்திடுமா?"

"Wird 'es', ich meine, Julian Swami wieder mal in unsere Gegend kommen oder für immer dort bleiben?"

"அது தெரியாது. ஆனா வந்தது எனக்குத் தெரிஞ்சா உனக்குச் சொல்றேன். உனக்குத் தெரிஞ்சா நீ எனக்குச் சொல்லு.

"Ich habe keine Ahnung, aber falls ich etwas erfahre, sage ich dir Bescheid. Wenn du etwas erfahren solltest, dann lass es mich wissen.

ரகுநாத்ராவ் போன பிறகு எனக்குச் சிரிப்பு வந்தது. ஜூலியனை அது இது என்று அஃறினைப் பொருளாகத்தான் பேசுகிறோம். ஆனால் யார் என்று தெரியாத அந்த சிந்திப் பெண் உயர்திணையாகி விடுகிறாள்!

Raghunath Rao verabschiedete sich von mir und ging. Ich musste laut lachen. Wir bezeichneten Julian Swami als 'es', als Neutrum, aber die uns unbekannte Sindhi-Frau als 'sie', eben nach dem natürlichen Geschlecht.

நிஜமான சந்நியாசிகளுக்கு நான், எனது எனக் கிடையா தல்லவா? மாமிசப் பிண்டம், வெறும் தேகம், கட்டை, காற்றடைத்த தோல் பை, சோற்று மூட்டை, குயவனது மண் பாண்டம் - கூறுவது? இவற்றை அது இது என்றில்லாமல் வேறெப்படிக் கூறுவது?

Für die echten Asketen haben Begriffe wie 'ich' und 'mein' keine Bedeutung mehr. Sie bezeichnen den menschlichen Körper als 'Fleischhaufen', 'bloß Körper', 'Klotz', Luftbeutel', 'Fresssack', 'irdener Wasserkrug' usw. Warum sollte man sie also nicht als 'es' bezeichnen?

ஜூலியனை அவ்வாறு குறிப்பிட எனக்கு அதிக நாள் பிடித்தது. அவரை முதலில் ஒரு ஜே.கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் பார்த்தேன். ஒல்லியான ஆறடி உயரம். பொன்னிற உடலில் காவி வேஷ்டி, தோளில் ஒரு காவித் துண்டு. நீண்ட முடி, தாடி. அவர் மெதுவாக நடந்து வந்தபோது இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னால் உலாவிய ஒருவரின் நினைவுதான் வந்தது.

Es hat einige Zeit gedauert, bis ich Julian als 'es' bezeichnen konnte. Zum ersten Mal begegnete ich ihm in einer Versammlung mit dem Philosophen, J. Krishnamurthy. Schmaler Körper, 1,80 m groß, safranfarbenes Veshti am goldfarbenen Körper, ein ebenfalls safranfarbenes Tuch an der Schulter, lange Haare und Vollbart. Seine langsamen Bewegungen erinnerten an Persönlichkeit, von der man sagen würde, sie habe vor zweitausend Jahren als Gottessohn unter den Menschen gelebt.

ஜே.கிருஷ்ணமூர்த்தி கூட்டங்களில் நண்பர்களே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள். அறிமுகமே இல்லாத வெள்ளைக் காரரோடு எப்படிப் பேச்சைத் துவக்குவது? ஆனால் மௌனமே பிரதானமாக இல்லாத இன்னொரு கூட்டத்தில் ஜூலியனைப் பார்த்தபோது பேசித் தெரிந்து கொண்டேன். சென்னையிலேயே ஆசிரமம் போலிருந்த ஒரு வீட்டில் தங்கி யிருப்பதாகச் சொன்னார். பின்னர் அந்த வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஹடயோகம் பயிலுவதற்காகவே இந்தியா வந்திருக்கிறார். வயது இருபத்தைந்து இன்னும் முடியவில்லை. அப்பாவின் அப்பா ஜெர்மானியர். அம்மா பெல்ஜியத்திலிருந்து வந்தவர்.

In den Versammlungen bei J. Krishnamurthy redeten nicht mal Freunde und Bekannte miteinander. Wie sollte man da mit einem fremden Europäer ein Gespräch anfangen? Bei einer anderen Versammlung jedoch, wo Schwelgen keinerlei Rolle spielte, habe ich Julian Swami kennengelernt.

Er erzählte mir, er wohne in einem Haus in Madras, das einem Ashram ähnelte. Ich habe ihn dann dort besucht. Er war von Südafrika nach Indien gekommen, um hier Hatha-Yoga zu lernen. Er war in seinem fünfundzwanzigsten Lebensjahr. Sein Großvater väterlicherseits war Deutscher, die Mutter kam aus Belgien.

ஆப்பிரிக்காவில் பாதி ஐரோப்பாவைப் பார்க்கலாம் என்று ஜூலியன் சொன்னார். ஆங்கிலேயர், பிரெஞ்சு, ஜெர்மானியர், பெல்ஜியம் நாட்டவர், ஸ்பெயின்காரர்கள், இத்தாலியர்கள்... இந்தச் சூழ்நிலையில் ஜூலியன் கடவுளைத் தேடிப்போனார்.

"Man kann in Sûdafrika Halbeuropa begegnen", behauptete Julian. "Da sind Engländer, Franzosen, Deutsche, Belgier, Spanier, Italiener.., alle." In dieser Atmosphäre aufgewachsen, war Julian auf der Suche nach Gott.

அதிகம் பிரபலமில்லாத ஒரு இந்துச் சாமியார் ஜூலி யனுக்குப் பஞ்சாட்சரம் உபதேசித்திருக்கிறார். இன்னும் யாரோ யோகம் பயின்றால் மந்திரம் சித்திக்கும் என்று கூறியிருக் கிறார்கள். அந்த நேரத்தில் தியோஸ் பெர்னார்டு என்பவர் எழுதியிருந்த ஹடயோக நூலை ஜூலியன் பார்த்திருக்கிறார். இருபத்திரண்டாவது வயதில் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.

Ein nicht so bekannter Hindu-Asket hatte Julian Panchatcharam gelehrt. Jemand hatte ihm gesagt, dass er Yoga lernen sollte, um sein Ziel zu erreichen. Zu diesem Zeitpunkt fiel ihm ein Buch über Hatha-Yoga verfasst von Theo Bernhard in die Hände. Als Julian zweiundzwanzig Jahre alt wurde, landete er in Indien.

ஆப்பிரிக்காவில் மதங்கள், குருமார்கள் கிடையாதா என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. என் கேள்வியை எதிர்பார்த்தது போல, "யோகத்தில் மௌனம் மிகவும் முக்கியம். எனக்கு அது இந்தியாவில்தான் கிடைக்கும் என்று தோன்றியது," என்றார்.

"Gibt es in Afrika keine religiösen Weltanschauungen und Glaubenslehrer?", wollte ich ihn fragen.

Als ob er meine Frage schon antizipiert hätte, sagte er: "Schweigen ist wichtig im Selbsterfahrungsprozess. Das werde ich nur in Indien finden, dachte ich."

எங்களுடைய முதல் சந்திப்புகள் இந்த உலகத்தைப் பற்றியதாயில்லை. வெள்ளைக்காரப் பையன் ஒருவன் கடவுளைத் தேடுகிறேன் என்று இந்தியாவுக்கு ஓடி வருவது ஒரு விதத்தில் சிறுபிள்ளைத்தனமாகக்கூட இருந்தது. எல்லாத் தத்துவக் கேள்விகளுக்கும் அந்த வயதிலேயே முறையான பதில் களை அவர் படித்திருந்தார். இவ்வளவு படிப்பே யோகத்துக்குத் தடையாக இருக்குமே என்று கூட நினைத்தேன்.

In unserem ersten Gespräch ging es eher um Gott als um die Welt. Ich fand es, ehrlich gesagt, etwas kindisch, dass ein hellhäutiger junger Mann nach Indien geflüchtet war, um hier Gott zu suchen. Er hatte schon viel gelesen und hatte passende Antworten auf vielerlei philosophische Fragen parat. So viel Belesenheit, dachte ich, würde für seine Suche eher ein Hindernis sein als Hilfe.

நான் இரண்டாம் முறை ஜூலியனைப் பார்க்கச் சென்ற போது அவர் ஆசனங்கள் செய்து கொண்டிருந்தார். அரை மணி நேரத்துக்குள் ஐம்பது அறுபது ஆசனங்கள் முடித்தார்.

Als ich Julian zum zweiten Mal besuchte, war er gerade dabei, Yogaübungen zu machen. Innerhalb einer halben Stunde übte er fünfzig bis sechzig Asanas.

வியர்வையையே தைலம் போலத் தேய்த்துக் கொண்டார். "நாங்கள் எவ்வளவு தலைமுறைகள் எவ்வளவு விதவிதமான மிருகங்களைத் தின்றிருக்கிறோம்! இந்த ஜன்மத்துக்கு இந்த நாற்றம் போகாது," என்றார், அப்புறம் "அது என்ன?" என்று கேட்டார்.

Schweißgebadet stand er da, als ob er sich seinen Körper mit Öl eingerieben hätte. "Wir haben seit Generationen so viele verschiedene Tiere verspeist, in meinem ganzen Leben werde ich den Gestank nicht los!", sagte er. Dann fragte er: "Was haben Sie da in der Hand?"

என் கையில் பளபளவென ஒரு பெரிய காகித உறை இருந்தது. அந்த நாளில் இந்திப் படத் துறையின் பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாரும் ஆளுக்கொரு கொள்ளைக்காரன் படம் எடுத்தார்கள். பூபத் என்ற சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்று விட்டான். ஆனால் மான்சிங் என்பவன் காவல் துறையினரோடு நேர்ந்த சண்டையில் சுடப்பட்டு இறந்தான். அவனுடைய பிரேதத்தைக் காவல் துறையினர் பல மைல்கள் தள்ளியிருந்த ஊருக்குத் தூக்கிச் சென்றபோது வழி நெடுக இருந்த கிராமங்களில் பலர் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள். என் கையிலிருந்த உறை திலீப்குமார் தயாரித்த 'கங்கா-ஜமுனா' என்ற படத்தின் துவக்கக் காட்சிக்கு அழைப்பிதழ். திலீப்குமார்தான் கொள்ளைக் காரன்.

Ich hatte einen großen Umschlag aus Glanzpapier in der Hand. Damals war es unter den Hindi-Fimproduzenten üblich, dass jeder zumindest einen Film über Banditen produzierte. Ein Bandit namens Bhupath aus dem Sambhal-Tal hatte sich Richtung Pakistan abgesetzt. Aber einer, der Mansingh hieß, wurde in einer Schießerei mit der Polizei erschossen. Als die Polizei seine Leiche zu seinem meilenweit entlegenen Dorf transportierte, weinten die Bewohner aller Dörfer, die auf dem Weg lagen. In dem Umschlag, den ich in der Hand hielt, war eine Einladung zur Premiere des Films "Ganga-Jamuna", dessen Produzent Dilip Kumar war. Dilip Kumar spielte In dem Film den Banditen.

நான் அந்த உறையை எதாவது ஒரு மூலையில் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஜூலியன் சாமி யாரின் கண்ணில் பட்டுவிட்டது.

Ich wollte eigentlich den Umschlag samt Einladung wegwerfen, aber Julian Swami war schneller. "Es ist eine Einladung zu einer Filmvorstellung.

"இதெல்லாம் உங்கள் பாதைக்கு நேர் எதிரானது சாமி, சினிமா. அதுவும் நன்றாயிருக்காது,” என்றேன்

Das ist etwas, was außerhalb Ihres Lebensbereichs liegt und deshalb uninteressant für Sie ist. Außerdem ist es kein guter Film."

"நீ பார்த்து விட்டாயா?" என்று கேட்டார்.

"Hast du den Film gesehen?", fragte er.

"நாளைக்குத்தான் ஆரம்பமே."

"Erst Morgen ist die Premiere."

"அப்போது எப்படி நன்றாயிருக்காது என்றாய்?"

"Woher weißt du denn, dass der Film nicht gut ist?"

"முன் அனுபவத்தினால்."

"Aus meiner bisherigen Erfahrung mit Hindi Filmen."

"இது புதிதாக இருக்கக் கூடாதா?"

"Dieser Film könnte doch anders sein, oder?"

இறுதியில் அந்த அழைப்பிதழை எடுத்துக்கொண்டு ஜூலியன் சாமியார் 'கங்கா ஜமுனா' திரைப்படம் பார்த்து விட்டு வந்தார். ஒரு சாதாரண இந்தியன் அதை இன்னொரு திலீப்குமார் சினிமாவாகத்தான் பார்த்திருப்பான்.

Julian Swami wollte die Einladung haben. Er ging tatsächlich hin und sah sich den Film "Ganga-Jamuna" an. Ein normaler Inder hätte diesen Film nur als einen weiteren Film von Dilip Kumar zur Kenntnis genommen.

ஆனால் ஜூலியன் சாமியாரை அது உலுக்கி எடுத்துவிட்டது. அப்படம் போய் வந்தபின் மூன்று நாட்கள் அவர்சாப்பிடவில்லை, தூங்கவில்லை என்று அந்த வீட்டுக்காரர்கள்சொன்னார்கள்.

Aber der Film erschütterte Julian Swami. Noch drei Tage nachdem er im Kino war, konnte er nicht schlafen, sagten die Nachbarn.

ஜூலியனுக்குச் சம்பல் பிரதேசம் பற்றியும் மத்திய பிரதேசத்து மக்கள் பற்றியும் நிறையவே தெரிந்திருந்தது. 'கங்கா ஜமுனா' படம் சாமியாருக்கு கற்பனைக் கதையாகத் தோன்ற வில்லை. காலம் காலமாக மனித இனத்துள்ளேயே தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் தொடர்ந்து நடந்து வரும் ஒரு குரூரமான யுத்தத்தின் ஒரு சிறு பகுதியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு இந்தியத் திரைப்படம் இவ்வளவு தீர்க்கமான அனுபவத்தை அளிக்கக் கூடியதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

Julian wusste eine Menge über das Sambhal-Tal und die Menschen, die im Unionsstaat Madhya Pradesh lebten, In seinen Augen handelte es sich bei diesem Film um kein Phantasieprodukt, sondern um den gelungenen Ausdruck eines Teilaspekts des seit Jahrhunderten dauernden grauenhaften Kriegs zwischen Recht und Unrecht innerhalb der gesamten Menschheit. Dass ein indischer Film solch ernsthafte und tiefe Gedanken in einem Menschen hervorrufen konnte, überraschte mich.

ஜூலியன் சாமியாரின் உலகம் வெகு வேகமாக விரிவடைய ஆரம்பித்தது. அவர் கண்ணில் தென்பட்ட எதைப் பற்றியும் அவரால் சுயமான ஒரு நிர்ணயம் தர முடிந்தது. அவர் கையெழுத்தே ஓவியம் போல இருக்கும். நிறையக் கவிதைகள் ஆங்கிலத்தில் எழுதினார். ஒரு கவிதை ஒரு பெண்மணி துணி உலர்த்துவது பற்றி இருந்தது. "இது உங்களூர் காட்சியா?" என்று கேட்டேன்.

Der Weltblick von Julian Swami erweiterte sich sehr schnell. Alles, was er sah, interpretierte er eigenständig. Seine Handschrift war wie Malerei. Er schrieb auch Gedichte auf Englisch. Ein Gedicht war über eine Frau, die Wäsche zum Trocknen aushängt. "Ist es eine Szene aus Ihrem Land?", fragte ich.

'நாளை பதினொரு மணிக்கு இங்கு வர முடியுமா?" என்று கேட்டார்.

"Kannst du morgen um elf Uhr hier bei mir vorbeischauen?"

"ஆபீஸ் இருக்கிறது."

"Ich muss ins Büro."

"பத்து நிமிஷம் வந்துவிட்டுப் போக முடியாதா?"

"Komm doch für zehn Minuten!"

"சரி வருகிறேன்.''

"Gut, ich komme."

அடுத்த நாள் பதினொரு மணிக்கு அந்த வீட்டுக்குச் சென்றேன். வழக்கமான இடத்தில் சாமியார் இல்லை. "மொட்டை மாடியில் இருக்கு," என்று அந்த வீட்டு அம்மாள் சொன்னாள்.

Am nächsten Tag war ich Punkt elf Uhr dort. Julian war nicht im Haus. Die Hausbesitzerin sagte:
"Er ist oben auf der Dachterrasse.

நானும் மொட்டை மாடிக்குப் போனேன். நல்ல வெயிலில் ஜூலியன் கண்ணை மூடி மல்லாக்கப் படுத்துக்கொண்டிருந்தார். நான் அருகில் சென்றதும் கண்ணைத் திறந்தார்.

Ich ging hinauf. Julian lag trotz der großen Hitze mit geschlossenen Augen auf dem Rücken auf der Terrasse. Als ich an ihn herantrat, öffnete er die Augen.

"என் கவிதையைக் காட்டுகிறேன்," என்று சொல்லிக் கைப்பிடிச் சுவரருகே சென்றார். அங்கிருந்துப் பார்த்தோம். வரிசையாக வீடுகளின் கொல்லைப்புறம் தெரிந்தது. "அந்த மூன்றாவது வீட்டைப் பார்," என்றார்.

"Ich zeige dir mein Gedicht", sagte er und ging an die Brüstung. Ich folgte ihm. Man konnte von dort die Hinterhöfe der benachbarten Häuser sehen. "Sieh dir mal das dritte Haus an !", sagte er.

அந்த வீட்டுக் கிணற்றடியில் ஒரு மாது துணி தோய்த்து கொண்டிருந்தாள். தோய்த்து அலசிய பின் துணிகளைக் கொடி யில் உலர்த்தினாள். "பார், பார்" என்று ஜூலியன் சொன்னார். எனக்கு முதலில் குறிப்பிடத்தக்கதாக ஏதும் தெரியவில்லை. சுமார் பதினைந்து துணிகளைக் கொடியில் விரித்து உலர்த்திய பின் அந்த அம்மாள் உள்ளே போய்விட்டாள். அதன் பிறகுதான் அந்தத் துணிகள் ஓர் அழகிய கோலம் போலத் தெரிந்தன.

An dem Ziehbrunnen saß eine Frau und wusch Wäsche. Nachdem sie die Wäsche ausgewrungen hatte, hängte sie sie an der Wäscheleine zum Trocknen auf. "Schau mal genau hin!", sagte Julian. Zunächst fiel mir gar nichts auf. Die Frau hängte etwa fünfzehn Wäschestücke auf und ging wieder ins Haus. Die Wäsche flatterten in der Luft und sahen wie ein schönes Kolam aus.

புடவை, வேஷ்டிகளை அளவெடுத்து மடித்தது போல ஒரு கோணல், ஒரு பிசிறு இல்லாமல் கொடியில் போட்டிருந்தாள். நடு நடுவே சிறுதுணிகள். இதெல்லாம் அந்த அம்மாள் திட்ட மிட்டுச் செய்யவில்லை. வாளியில் கையை விட்டு எடுத்த துணியை அப்படியே உலர்த்தினாள். அந்த எளிய அன்றாடப் பணியிலும் ஒரு நேர்த்தியும் அழகும் அவளால் உண்டு பண்ண முடிந்தது.

Sie hatte die Saris, Veshtis und dazwischen kleinere Wäschestücke, so ordentlich aufgehängt, dass es keine Falten zu sehen gab. Sie nahm jeweils ein Stück aus dem Eimer und hängte es auf. Die Reihenfolge war keineswegs geplant. Es war Alltagsarbeit, aber sie wurde ordentlich und zugleich ästhetisch durchgeführt.

இதற்குப் பிறகு எனக்கும் ஜூலியனுக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தன. தத்துவ விஷயங்கள்தான் நழுவத் தொடங்கின. அவர் முகத்தில் நிறையச் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. இன்னும் நிறையப் படங்கள் வரைந்தார். யாரோ அழைத்தார்கள் என்று மதுரைக்குப் போனார். இரு நாட் களுக்குப் பிறகு அவர் மதுரையில் கைது செய்யப்பட்டுக் காவலில் இருப்பதாகத் தகவல் வந்தது. சென்னையில் ஒரு நீதிபதிக்கு ஜூலியனைத் தெரியும். அவரிடம் சொல்லி ஒரு வழியாக ஜூலியனை விடுவித்துச் சென்னைக்கு அழைத்து வந்தோம்.

Julian und ich, wir redeten immer über viele Themen. Die philosophischen Themen traten langsam in den Hintergrund. Julian fing an, viel zu lächeln und zu lachen. Er malte viele Bilder. Jemand lud ihn eines Tages nach Madurai ein. Nach zwei Tagen erreichte uns aus Madurai die Nachricht, dass Julian verhaftet worden sei und in Untersuchungshaft sitze. Ein Richter aus Madras kannte Julian. Mit seiner Hilfe bekamen wir Julian frei und brachten ihn nach Madras.

ஜூலியன் அயல்நாட்டவர், இந்தியாவில் தங்குவதற்கு உரிய இலாகாவின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கும் இந்தியா வுக்கும் ராஜிய உறவு இல்லாததால் பல தகவல்களுக்கு டில்லிக்குப் போக வேண்டும்.

Da Julian Ausländer war, brauchte er von der zuständigen Behörde in Indien eine Aufenthaltserlaubnis. Außerdem musste auch einen gültigen Pass haben. Da es zwischen Südafrika und Indien keine diplomatische Beziehung gab, musste er wegen jeder Kleinigkeit nach Delhi fahren.

அந்த நாளில் சென்னையில் சாஸ்திரி பவன் அமைக்கப்பட வில்லை. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் இருந்தன. நானும் ஜூலியனும் அடையாறில் இருந்த குடியேற்றப் பிரிவு அலுவலகத்திற்குப் போனோம். முதலில் அயல்நாட்டினர் பதிவு இலாகாவுக்குப் போக வேண்டும் என்றார்கள்.

Damals gab es kein Gebäude wie den 'Shastri Bhavan', in dem sich heute mehrere staatliche Behörden unter einem Dach befinden. Die Behörden lagen recht verstreut in der ganzen Stadt. Wir, Julian und ich, gingen zuerst zur Einwanderungsbehörde. Man sagte uns dort, Julian sollte zuerst zu der Ausländerbehörde gehen.

அது நுங்கம்பாக்கத்தில் இருந்தது. அவர்கள் ஜூலியன் முதலில் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்றார்கள். அங்கிருந்த ஒருவர் ரகசியமாகச் சொன்னார். “சாமியைத் தாடி, காவியெல்லாம் எடுத்துட்டு சாதாரணமா இருக்கச் சொல்லுங்க. இப்ப இருக்கிற மாதிரி இருந்தா பளிச்சுனு அடையாளம் தெரியும். எல்லாரையும் போல் இருந்தா இவ்வளவு பெரிய தேசத்திலேயும் கூட்டத்தோடு கூட்டமா மறைஞ்சு இருந்துட லாம், எவ்வளவு வருஷம் வேணும்னாலும்."

Diese war in Nungambakkam. Dort sagte man uns, Julian sollte zuerst seinen Pass verlängern lassen. Ein Beamter dieser Behörde sagte mir im Vertrauen: "Ich habe einen freundlichen Rat für Ihren Freund. Sagen Sie ihm, er soll auf safranfarbene Kleidung verzichten, den Bart abrasieren und wie eine normale Person aussehen. So, wie er momentan aussieht, wird er sicher jedem auffallen. Wenn er aber ganz normal aussehen würde, könnte er in unserem riesengroßen Land unter den Millionen von Menschen jahrelang unentdeckt leben!"

ஜூலியன் சாமியாரின் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடிய அனுபவமோ செல்வாக்கோ எனக்குக் கிடையாது. அவர் ஏன் மூன்று நான்கு தனித் தனி இலாகாக்களிடமிருந்து ஒப்புதல் வாங்க வேண்டும், அயல் நாட்டவர் பதிவு என்றால் என்னஎன்றெல்லாம் எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது அவர் அந்த அதிகாரிகளோடு பேசும்போது வெளிப்பட்டது. அப்படியானால் ஏன் நிலைமை இவ்வளவு தீவிரமடையும் வரை ஒன்றுமே செய்ய வில்லை?

இதையே நான் அவரையும் கேட்டேன். அவர் புன்னகை யுடன், "நான் சாமியாரில்லையா?" என்றார்.

Ich hatte weder die Erfahrung noch die nötigen Beziehungen, die Probleme von Julian Swami zu lösen. Wozu brauchte er eine Genehmigung von vier verschiedenen Behörden? Warum sollten sich die Ausländer in Indien bei einer Behörde melden, wenn es für die Millionen Inder nicht mal Personalausweise gibt?

Das waren Sachen, von denen ich kaum etwas verstand. Julian schien jedoch diese Sachen sehr gut zu verstehen. Je mehr ich bei den Gesprächen zwischen den Beamten diverser Behörden und Julian dabei war, desto klarer wurde mir das. Warum hatte Julian nicht vorher etwas unternommen, sondern gewartet, bis die Lage ernst wurde?

Ich stellte ihm diese Frage und er antwortete lächelnd: "Ich bin doch Asket, oder?"

"நீங்க உங்க நாட்டிலேயே சாமியாராக இருக்கக் கூடாதா?""இங்கே இப்படி ஒரு துண்டோடும் வெறும் காலுடனும் இருக்கிறேன். அங்கே ஒரு நிமிடம் சூட், ஜோடு இல்லாமல் இருக்க முடியுமா? இந்த இடத்தை விட அங்கேதான் என்னை முதலில் ஜெயிலில் அடைத்துவிடுவார்கள். அங்கே வெள்ளைக் காரர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தவர்கள் போல இருந்தாக வேண்டும். அந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாது."

"Wollen Sie nicht lieber ein Asket im eigenen Land sein?" "Hier kann ich mit einem Lendentuch und barfuß herumlaufen. In Südafrika kann man keinen Augenblick ohne Anzug und Schuhe auftreten. Ich würde dort viel schneller im Gefängnis landen als hier. Die hellhäutigen Europäer müssen sich in Südafrika so benehmen, als ob sie direkt vom Himmel gekommen sind. Das ist eine Quälerei, die ich nicht ertragen kann."

"இங்கே மட்டும் மதுரையில் போலீஸ் உங்களை அடிக்கவில்லையா?"

"Die Polizei hier in Madurai hat Sie ja auch misshandelt."

“அடித்தார்கள். அப்புறம் அவர்களே காலில் விழுந்து அருள் புரியக் கேட்டார்கள்."

"Das stimmt, aber nachher haben sie sich bei mir entschuldigt und sogar um meinen Segen gebeten!"

"நாளைக்கு நான் வர முடியாது. நீங்க அந்த ஜட்ஜைக் கட்டாயம் பாருங்க.''

"Morgen müssen Sie noch den Richter aufsuchen! Ich kann leider nicht mitkommen.

"பார்க்கலாம்."

"Ist schon gut."

நான் கிளம்பியும் விட்டேன். அப்போது அவர் சொன்னார்-"ஒரு வெள்ளைக்காரன் இந்தியனாகி விடலாம். ஆனால் ஒரு வெள்ளைக்காரச் சந்நியாசி இந்தியனாக முடியாது. சந்நியாசிகள் மட்டும் அவரவர்கள் ஊர் போய்த்தான் சாக வேண்டி யிருக்கிறது."

Ich verabschiedete mich von ihm. Beim Abschied sagte er: "Ein Europäer kann zwar Inder werden, aber ein europäischer Asket kann niemals Inder werden, die Asketen haben keine Wahl. Dass sie in ihr eigenes Land zurückkehren und dort sterben müssen, ist ihr Schicksal.“

நான் இரு நாட்கள் கழித்து அவரைப் பார்க்கச் சென்ற போது அவர் கிளம்பிப் போய்விட்டார் என்றார்கள்.

Als ich ihn nach zwei Tagen besuchen ging, sagte man mir, er sei schon verreist. .

Nach zehn Tagen kam Julian zu mir. Es war abends gegen neun Uhr. Draußen regnete es

"இதைப் பார்த்தாயா?” என்று துணியால் சுற்றிய ஒரு சிறு கட்டைக் காண்பித்தார்.

"Hast du das gesehen?", fragte er mich und zeigte mir ein Bündel, das mit Stoff umwickelt war.

"என்ன??"

"Was ist das?"

"எனக்குத் தெரிந்த தஸ்தாவேஜுகள் எல்லாம் செய்து விட்டேன்." இதைச் சொல்லும்போது அவர் முகம் வேதனையைக் காட்டியது. தயார் .

"Das sind die Dokumente, die man von mir verlangt hat", sagte er mit einer gequälten Miene.

"சாப்பிடுகிறீர்களா?"

"Wollen Sie etwas essen?"

"வேண்டாம். இங்கே பக்கத்துக் கொட்டகையில் ஒரு படம் ஓடுகிறது. அதை நான் பார்க்க வேண்டும். என்னை அழைத்துப் போகிறாயா?"

"Danke, nein. Im Kino nebenan läuft ein Film, den ich sehen möchte. Kommst du mit?"

நான் கிளம்பினேன். அது ஆங்கிலப் படம். 'எட்கர் ஆலன் போ' என்ற எழுத்தாளனின் மூன்று கதைகளைப் படமாக எடுத்திருந்தார்கள். எட்கர் ஆலன் போ எழுதிய கதைகளைப் படிப்பதற்கே சற்று உறுதியும் தைரியமும் வேண்டும்.

Es handelte sich um einen Film auf Englisch, eine Verfilmung von drei Erzählungen von Edgar Allan Poe. Man benötigte eine gewisse innere Stärke, Reife und auch Mut, um die Erzählungen von Edgar Allan Poe zu lesen und zu genießen.

கொட்டகையில் கூட்டம் இல்லை. காட்சி ஆரம்பமாகியது. முதல் படம் 'மோரெல்லா' ஊருக்கு வெளியே ஒரு மாளிகையில் வாழும் ஒருவனுக்கு அவன் மனைவிமீது வெறுப்பு வந்து அவள் நோய் கண்டு படுத்திருக்கும்போது விஷத்தை மருந்தாகக் கொடுத்து அவளைக் கொன்று விடுகிறான். நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகள் வருவதற்குள் சவ அடக்கம் நிகழ்ந்து விடுகிறது. தகப்பன் மகளுக்கு ஒரு பெரிய மரப்பெட்டியைப் படுக்கையாக அமைத்திருக்கிறான். அன்றிரவு பெரிய புயல் அடிக்கிறது. காற்று 'மோரெல்லா, மோரெல்லா' என்று அலறு கிறது. அதுதான் அவன் மனைவியின் பெயர். மகளுக்கு அவள் அம்மா ஆவியுருவில் தோன்றி அவள் படுத்திருந்த பெட்டியைத் திறக்கச் சொல்கிறாள். மகள் திறக்கிறாள். அதில் அவள் அம்மாவின் பிரேதம் கிடக்கிறது. இப்போது அவள் அப்பா மகளையும் கொல்ல வருகிறான். மகள் மாளிகையை விட்டு வெளியே புயலில் ஓடுகிறாள். போகும்போது வாசல் கதவை வெளியே தாளிட்டு விடுகிறாள். அவள் அப்பா கதவை உடைத்து வெளியே வருவதற்குள் மாளிகை இடி தாக்கிப் பற்றி எரிகிறது. அப்பா, அம்மா இருவர் உடல்களும் எரிந்து சாம்ப லாகின்றன.

Die Vorstellung begann. In der ersten Geschichte ging es um einen Mann, der mit seiner Frau in einem Schloss lebt, das außerhalb der Stadt liegt. Der Mann hasst seine Frau. Als sie einmal krank wird, vergiftet er sie, indem er ihr etwas Giftiges als Medikament verabreicht. Die Beerdigung findet statt, bevor die Tochter, die in der Stadt studiert, im Schloss eintrifft. Der Mann will auch seine Tochter umbringen, aber die Mutter erscheint in der Nacht als Geist und warnt die Tochter. Die Tochter schließt die Tür von außen ab und läuft aus dem Schloss weg. Der Vater will sie verfolgen. Bevor er die Tür von innen aufbrechen kann, wird das Schloss von einem Blitz getroffen und brennt nieder, der Vater kommt um.

நாங்கள் காட்சி முடிந்து வெளியே வந்தபோது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தோம். ஜூலியனுக்கு என் வேஷ்டியொன்றை எடுத்துக் கொடுத்தேன்.

Als die Vorstellung zu Ende ging und wir das Kino verließen, regnete es. Wir kamen triefend nass zu Hause an. Ich gab Julian ein Veshti von mir, damit er sich etwas Trockenes anziehen konnte.

"வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு செய்துவிட்டேன் என்று யாரும் சொல்லிக்கொள்ள முடியாது. ஒன்று செய்துவிட்டால் அப்புறம் அடுத்தது... அடுத்தது... அடுத்தது என்று சாகும்வரை அது தொடர்ந்து கொண்டிருக்கும்."

"Keiner kann behaupten, er habe im Leben nur einen einzigen Fehler gemacht. Wenn man einen Fehler macht, dann folgt ein anderer, dann ein anderer und so weiter, bis man stirbt", sagte Julian plötzlich.

"இல்லை, சாமி. எட்கர் ஆலன்போவுக்குக் கொஞ்சம் விபரீதமான கற்பனை."

"Nein Swami! Edgar Allan Poe ist bekannt für seine groteske Phantasie."

"கற்பனை இல்லை, இதெல்லாம் கற்பனையேயில்லைக்

"Das ist keine Phantasie. Das ist wahrhaft keine Phantasie."

அப்போது நான் கேட்டேன் -

Ich fragte ihn in dem Augenblick:

"உங்கள் தஸ்தாவேஜுக் கட்டு எங்கே?"

"Sagen Sie mal! Wo ist das Bündel mit den Dokumenten?"

"கொட்டகைக்கு வெளியேயே தூக்கி எறிந்து விட்டேன்..

"Ich habe es außerhalb des Kinos irgendwo weggeworfen."

"ஐயோ! எங்கே? எங்கே?"

"Um Gottes willen! Wo denn? Wo?"

"இருட்டில் என்ன தெரியும்?"

"Das weiß ich nicht mehr, es war sowieso stockdunkel."

"ஏன்?"

"Wie bitte?"

"சாக்கடையில் போட்டுவிட்டேன்."

"Ich habe es in die Gosse in der Nähe des Kinos geworfen."

நான் குடை எடுத்துக்கொண்டு அந்த இருட்டிலும் மழையிலும் அவருடைய தஸ்தாவேஜுக் கட்டைத் தேடிப் போனேன். தெருவோரச் சாக்கடையில் தண்ணீர் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. சினிமா கொட்டகையருகில் சாக்கடையில் இறங்கி காலால் துழாவிப் பார்த்தேன். 'இது என்ன பைத்தியக்காரத்தனம்' என்று தோன்றியும் தேடினேன். காலில் ஒரு தகரத் துண்டு காயப்படுத்தியதுதான் மிச்சம்.

Ich nahm einen Regenschirm und rannte dorthin. Es war stockdunkel und es regnete immer noch. Die Gosse war voll vom Regenwasser. "Ich werde verrückt!", dachte ich, steckte mein Bein in die Gosse und suchte und suchte, fand aber nichts. Ich kam total enttäuscht und aufgeregt zurück.

ஜூலியன் தூங்காமல் விழித்திருந்தார். நான் கோபத்துடன் ஈரத் துணியை அவிழ்த்துப் போட்டுத் தலையைத் துடைத்துக்கொள்ளத் துவங்கினேன்.

Julian war noch wach. Ich nahm ein Handtuch, trocknete meine Haare ab und fragte:

"அது என் கவலை, உனக்கென்ன வந்தது?' என்று ஜூலியன் கேட்டார்.

"Warum haben Sie das gemacht?"

"Ist doch mein Problem! Warum regst du dich auf?"

"தெரியாது."

Ich hatte keine Antwort.

"உன் மாதிரி ஒரு ஆள் அதையெல்லாம் தயாரித்துக் கொடுத்தான். அது போனதே நல்லது. தவறு.... தவறு... தவறு என்று நான் தொடர்ந்து தவறுகளே செய்து கொண்டிருக்கும்படி இருக்கும். இப்போது நான் நிஜமான சந்நியாசி. எனக்குப் பேர், ஊர், அட்ரஸ் ஏதும் கிடையாது.'

"Einer, wie du, hat diese Dokumente für mich zusammengestellt. Es ist gut so, dass sie jetzt weg sind. Jetzt brauche ich in meinem Leben nicht mehr einen Fehler nach dem anderen zu machen. Jetzt bin ich endlich ein echter Asket. Ich habe keinen Namen, keine Heimat und keinen Wohnsitz."

விடிவதற்கு முன்னால் ஜூலியன் கிளம்பிப் போய்விட்டார். அவருடைய காவித் துணி உலர இரண்டு நாட்களாயிற்று.

Vor Tagesanbruch war Julian weg. Es hat zwei Tage gedauert, bis seine safranfarbene Kleidung wieder trocken war.

பாய்க்கடைப் பக்கம் போனபோது கிஷன்சந்த்பாய் கேட்டார் -"ஜூலியன் சாமி இப்போ எங்கே இருக்குதெரியுமா?"

Als ich auf dem Markt Kishan Chand Bhai traf, fragte er: "Wissen Sie, wo Julian Swami heute lebt?"

"தெரியாது. பாத்து மூணு மாசம் ஆறது.""ஆக்ராவிலே இருக்கு. என் உறவுக்காரப் பெண்ணைக்கல்யாணம் பண்ணிண்டுடுத்து."

"Keine Ahnung ! Ich habe ihn seit drei Monaten nicht mehr gesehen." "Er ist in Agra. Er hat eine Verwandte von mir geheiratet."

"நீங்க கல்யாணத்துக்குப் போகலையா?"

"Waren Sie bei der Hochzeit?"

"எனக்குத் தெரியாது. தெரிஞ்சாலும் ஆக்ரா போறது அவ்வளவு சுலபமா?"

"Ich habe es erst später erfahren. Außerdem Ist es sehr umständlich, nach Agra zu fahren."

அந்த நாளில் டில்லிப் பக்கம் போக கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஒன்றுதான் இருந்தது. எனக்குத் தெரிந்திருந்தால் போயிருப்பேன். ஜூலியனோடு அரசு அலுவலகங்கள் சென்றிருந்ததில் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அயல் நாட்டினராக இருந்தாலும் இந்தியப் பிரஜையைக் கல்யாணம் செய்து கொண்டால் இந்தியப் பிரஜையாகி விடலாம். ஜூலியன் கல்யாணம் செய்துகொண்டது அதற்காகத்தான் இருக்க வேண்டும்."

Damals gab es nur den 'Grand Trunk Express', wenn man mit dem Zug nach Delhi fahren wollte. Wenn ich es rechtzeitig gewusst hätte, wäre ich zur Hochzeit gefahren. Da ich mehrmals mit Julian bei den Behörden gewesen war, wusste ich in einer Sache gut Bescheid. Ein Ausländer, der eine indische Staatsangehörige heiratet, hat eine gute Chance, in Indien eingebürgert zu werden. Gerade aus diesem Grund muss Julian geheiratet haben.

ரகுநாத்ராவும் கிஷன்சந்த்பாய் கடைக்குச் சென்று ஜூலியனின் முகவரி வாங்கி வந்தான். நாங்கள் இருவரும் ஹோலி முடிந்த பிறகு ஆக்ரா போவதாகத் திட்டமிட்டோம். ஆனால் அதற்குள் ஜூலியன் இறந்துவிட்டதாகத் தந்தி வந்தது. யோகா சனங்கள் செய்யும்போது சாமி அப்படியே உட்கார்ந்துவிட்ட தாம். அநேகமாகக் கேசரி முத்திரை செய்யும்போது நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த முத்திரை பழகுவதற்காக ஜூலியன் நாக்கைக் கீழ்த்தாடையோடு இணைக்கும் சதையைத் தினமும் சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டது எனக்குத் தெரியும். ஜூலியனின் சம்சார வாழ்க்கை சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை. அது இந்தியப் பிரஜையாக மாற முடியாவிட்டாலும் ஓர் இந்தியப் பெண்ணை விதவையாக மாற்றிவிட்டது.

Raghunath Rao holte von Kishan Chand Bhai die Adresse von Julian. Wir hatten vor, nach dem Holifest nach Agra zu fahren. Davor kam jedoch ein Telegramm, dass Julian Swami nicht mehr am Leben sei. Er soll gestorben sein, als er Yogaübungen machte. Das musste bei der Ausführung der Kesari- Asana passiert sein. Das Eheleben von Julian hat nicht mal ein paar Wochen gedauert. Julian Swami konnte leider kein indischer Staatsbürger werden, dafür hatte er immerhin eine Inderin zur Witwe gemacht.

Glossary

Zu Ashokamitran

"Das menschliche Leben ist ein großes Drama, und was ich geschrieben habe, sind nur einzelne kleine Szenen davon!" sagt Ashokamitran (eigentlich Jagdish Thyagarajan), einer der bekanntesten Tamil-Autoren Indiens. Im Lauf der letzten 45 Jahre hat er mehrere Romane und Novellen sowie über 150 Erzählungen geschrieben und gilt in mehrfacher Hinsicht als Trendsetter, wenn von der zeitgenössischen Tamil-Literatur die Rede ist. Für den Erzählband Appavin Snehidar (Freund meines Vaters) erhielt er 1996 den Preis der Sahitya Akademi, einen der renommiertesten Literaturpreise des Landes. Der preisgekrönte Roman Padhinettavadu Atchkodu (Der achtzehnte Breitengrad, 1977) erzählt von der Übernahme des Fürstenstaates Hyderabad durch das postkoloniale Indien (1950) und damit ein Kapitel aus Ashokamitrans Biographie: Geboren 1931 in Secunderabad, erlebte er als junger Mensch den damit verbundenen Terror und Aufruhr. Mit seiner Familie übersiedelte Ashokamitran 1952 nach Madras. Er war beim Gemini- Filmstudio für die Öffentlichkeitsarbeit verantwortlich und Redakteur der renommierten Zeitschrift "Kanayazhi" (Siegelring), die die literarische Szene in Tamil Nadu mit neuen Impulsen bereichert hat.
Sein erster Roman Karainda Nizhalgal (Aufgelöste Schatten) erschien 1969 und gilt als ein Meilenstein der Tamil-Literatur. Beschrieben wird darin, wie sich das Leben verschiedener Menschen während der Entstehung eines Films verändert. Der Roman Thanner (Wasser, 1973) schildert, wie in einer Krisensituation— akuter Wasserknappheit — Gier, Gemeinheit und Gefühllosigkeit gegenüber den Mitmenschen an die Oberfläche kommen, und in Otran (Spion, 1985, ausgezeichnet mit dem Staatspreis von Tamil Nadu für den besten Roman des Jahres) geht es um die interkulturelle Begegnung von Schriftstellern aus verschiedenen Ländern in einer amerikanischen Stadt.

Ashokamitran versteht sich als aufmerksamer Beobachter ohne jegliches Sendungsbewusstsein. Der Erzähler in seinen Werken hat keinen moralisch belehrenden Ton, bietet keine Lösungen an, Ist vielmehr ein auf die Zustände sanft hinweisender Zeitgenosse, der lieber in den Hintergrund tritt, um eine direkte Kommunikation zwischen dem Leser und seinen Figuren zu ermöglichen. Dem entspricht Ashokamitrans unaufdringlicher, einfacher Stil, der, mit unterschwelligem Humor untermalt, auf jegliche Abstraktion verzichtet. Mit scharfem Blick fürs Detail stellt seine Figuren dar, ihre Genügsamkeit und Lebensfreude. Wichtig ist nicht, was im einzelnen mit ihnen geschieht, sondern wie sie sich verhalten. Als indischer Leser kann man sich ohne Probleme mit ihnen identifizieren und solidarisieren, denn sie denken und handeln genauso wie man selbst in ihrem Kampf gegen die Tücken des Alltagslebens in Indien. Ashokamitran starb 2021 in Chennai.

Asokamitran schrieb 1996 die Erzählung "Ein Asket heiratet". (Originaltitel: samiyarukku oru manappenn).