சுந்தர்

Foreign translations> சுந்தர்
ASHOKAMITRAN1.jpeg

சுந்தர்

அசோகமித்திரன்

Ashokamitran

ASHOKAMITRAN1.jpeg
Ganeshan V.jpeg

Sundar* (1)

Übersetzt von : Vridhagiri Ganeshan aus Tamizh)

Translated by : Vridhagiri Ganeshan

Ganeshan V.jpeg

ஒரு பசுமாட்டை வாங்கியே விடுவது என்று தீர்மானித்து விட்டோம். "எருமை மாட்டையே கட்டிண்டு அழறதுக்கு ஒரு பசு மாட்டைக் கொல்லையிலே கட்டினாலும் வீடு லட்சும் கரமாயிருக்கும்.''

"Wir müssen uns unbedingt eine Kuh kaufen", beschlossen wir, denn wir hatten die Nase voll von Büffeln und waren am Ende unserer Kräfte. Immerhin verheißt es Glück, eine Kuh im Hinterhof zu haben, da sie ein Symbol für die Göttin Lakshmi ist.

எருமை மாடுகளை நாங்களாக வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லை. ஒரு சமயம் ஏதோ காரணத்துக்காக ஒரு மாடு எங்கள் வீட்டில் வந்து சேர்ந்தது. சில நாட்களுக்குத்தான் என்று நினைத்தோம்; அது நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அது சினைப் பட்டுப் பால் மரத்துப் போனவுடன் பாலுக்காவென்று இன்னும் ஓர் எருமை மாடு வாங்கினோம். இரண்டும் ஒரே சமயத்தில் மரத்துப் போக, மூன்றாவது எருமை வந்து சேர்ந்தது.

Wir hatten die Büffel nicht hereingebeten. Aus einem mysteriösen Grund ist uns eines Tages ein sich herumtreibender Büffel einfach zugelaufen. "Er bleibt sicher nur einige Tage!" dachten wir. Er hatte sich jedoch entschlossen, für ewig bei uns zu bleiben. Als er nach einiger Zeit keine Milch mehr gab, kauften wir einen anderen. Als dieser auch keine Milch mehr lieferte, kauften wir eben einen dritten.

நாங்கள் இருந்த இடத்தில் எந்த நாட்களிலும் வேலையாட்கள் கிடைப்பது சுலபம் அல்ல. வீட்டில் நாங்களே ஒவ்வொருவராகத் தினமும் சாணியைத் திரட்டிக் குவிப்போம். ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறை வறட்டி தட்டுவோம். சாணத்துடன் கரித்துகளைக் கலந்து பிசைந்து உருண்டைகளாக உருட்டிப் போட்டு உலர்த்துவோம். நாங்கள் நல்ல கோடை நாட்களிலும் வெந்நீர் போட்டே குளிப்போம்.

Da wir immer Probleme hatten, einen Diener zu finden, haben wir abwechselnd den Kuhmist gesammelt. Alle fünf oder sechs Tage machten wir daraus Kuhfladen. Wir haben aus einer Mischung von Kuhmist und Holzkohle Kugeln geformt. Wir haben diese Kugeln in der Sonne trocknen lassen. Wir haben dann sogar im Sommer im heißen Wasser gebadet.

கொல்லைப் புறத்தில் ஒரு மூலையில் சாணி மலையாகக் குவிந்து நிற்கும். இன்னொரு மூலையில் வறட்டி களும் சாணி உருண்டைகளும் இன்னொரு மலையாக நிற்கும். இவ்விரு மலைகளுக்கிடையில் இவற்றின் முழு முதற்காரணமான எருமை மாடுகள் அசைபோட்டுப் படுத்திருக்கும். இந்த மாடுகள் ஓர் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருக்க வேண்டும். எந்த வொரு சமயத்திலும் ஒரு மாட்டுக்கு மேல் சுறக்கத் தேவை யிராது. மூன்றுமே சொட்டுப் பால் கூடத் தர இயலாமல் போன மாதங்களும் உண்டு.

In unserem Hinterhof gab es einen kleinen Berg von aufgestapelten Kuhfladen und Mistkugeln. Zwischen zwei solchen Bergen lagen kauend die Büffel. Sie hatten sicher ein geheimes Abkommen miteinander. Nur einer von ihnen konnte gemolken werden. Es gab auch Zeiten, wo alle drei keinen Tropfen Milch lieferten.

நல்ல காலத்துக்கு முடிவு உண்டு. கெட்ட காலத்துக்கும் கூடத்தான். எருமைமாடு ஒன்று செத்துப் போயிற்று. இன் னொன்று காணாமல் போயிற்று. மூன்றாவது இன்னும் நான் கைந்து மாதங்கள் ஆகும் கன்று போட. என் அக்கா கைக் குழந்தையுடன் சில மாதங்கள் எங்களுடன் வந்து இருக்கப் போகிறாள். இப்போது போய்ப் பால்காரனிடம் கைப்பாலுக்குத் தொங்குவதைக் காட்டிலும் ஒரு பசுமாட்டை வாங்கினால் என்ன? கொல்லையில்தான் மாடு கட்டும் முளைகள் மூன்றில் இரண்டு வெறுமனே இருக்கின்றனவே!

Alle guten Dinge, aber auch schlechten, sagt man, haben mal ein Ende. Einer der Büffel starb. Ein anderer verschwand auf einmal. Der dritte sollte in vier bis fünf Monaten kalben. Mittlerweile wollte meine ältere Schwester mit ihrem Kleinkind zu uns kommen und einige Monate bleiben. Eher eine Kuh kaufen als dem Milchmann den Hof machen - das war unsere Überlegung, denn zwei der Baumstümpfe zum Anbinden der Büffel waren ja sowieso frei.

நாங்கள் பசு மாடு வாங்கப் போகிறோம் என்ற செய்தி ஊரெல்லாம் பரவிற்று. மாட்டுச் சம்பந்தம் இல்லாதவர்களே இதில் அதிக உற்சாகம் காட்டினார்கள். இவர்கள் கிண்டலைக் கண்டு ஏன் பசுமாடு வாங்க வேண்டும் என்ற எரிச்சல் வந்தாலும், இவர்களுக்காகவாவது ஒரு பசுமாட்டை வீட்டில் வாங்கிக் கட்டியே ஆக வேண்டும் என்றும் வீம்பு பிறந்தது. நாங்களும் முதற் கன்று போட இருக்கும் இளையதிலிருந்து எட்டுமுறை ஈன்ற முதிய மாடுவரை பதினைந்து மாடுகளைப் பார்த்தோம்.

Die Nachricht, dass wir vorhatten, eine Kuh zu kaufen, verbreitete sich in der Nachbarschaft wie Wildfeuer. Gerade diejenigen, die keinerlei Beziehung zu einer Kuh hatten, waren eigentlich mehr aufgeregt. Die Ratschläge, die wir unaufgefordert bekamen, haben uns so verärgert, dass wir manchmal dachten, vielleicht sollten wir doch keine Kuh kaufen. Wir wurden dann doch etwas trotzig und sagten uns, gerade wegen solcher Leute müssen wir zu Hause eine Kuh haben. Wir haben uns etwa fünfzehn Kühe angeschaut, darunter befanden sich sowohl eine sehr junge, die demnächst kalben sollte, und eine ganz alte, die schon achtmal gekalbt hatte.

முதலில் அப்பாவும் நானும் போய்ப் பார்த்துவிட்டு வந்து, அம்மாவிடம் மாட்டின் நிறம், கொம்பின் நீளம் போன்ற அடிப்படை விஷயங்களில்கூட முரண்பாடு தெரிய விவரிப் போம். அம்மாவுக்கு அப்பாவின் சாமர்த்தியத்தின் மீது சந்தேகம். ஆக மொத்தம் நாங்கள் மூவரும் ஒருநாள் போய் அந்த மாட்டைப் பார்ப்போம். நாங்கள் போனவேளையில் மாட்டைக் கறந்திருப்பார்கள். அது எவ்வளவு கறக்கிறது, எப்படிக் கறக்கிறது என்று பார்க்க இன்னொரு முறை போவோம்.

Zuerst gingen mein Vater und ich und inspizierten die infrage kommende Kuh. Dann kamen wir nach Hause und beschrieben meiner Mutter die Farbe, die Länge der Hörner und die anderen Merkmale. Meine Mutter reagierte immer skeptisch, da sie von dem Urteilsvermögen meines Vaters nicht zu sehr überzeugt war. Also gingen wir nun alle drei, um die Kuh nochmals zu besichtigen. Jedes Mal hatte man die betreffende Kuh gerade vor unserem Eintreffen gemolken. Wir mussten also nochmals hingehen, um herauszufinden, ob die Kuh ordentlich Milch liefern konnte, und wenn ja, wie viel.

ஓரிருவர் அவர்கள் மாட்டை வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு போய் இரண்டு நாட்கள் வைத்திருந்து விட்டு முடிவு செய்யுங்கள் என்று சலுகை தந்தார்கள். ஒருவர் 'பாதிப் பணம் இப்போது தாருங்கள்; மீதியை அடுத்த மாதம் தாருங்கள்' என்றார். இப்படியெல்லாம் வந்த மாடுகளை விட்டு விட்டு, மார்க்கெட்டுக்கு அருகிலிருந்த மார்வாடி வீட்டிலிருந்து ஒரு மாட்டை உடனே முழுப்பணமும் கொடுத்து வாங்கி வந்தோம்.

Einige schlugen vor, wir sollten die Kuh nach Hause mitnehmen, einige Tage bei uns. behalten und erst dann entscheiden, ob wir die Kuh kaufen wollten oder nicht.

Andere sagten: "Geben Sie uns den halben Preis jetzt und den Rest im nächsten Monat !“ Wir verzichteten auf solche Angebote, gingen eines Tages zu einem Marwari-Geschäftsmann in der Nähe des Markts, kauften eine Kuh, zahlten den vollen Preis bar und gingen mit ihr Hause.

எதற்கோ மூன்று நான்கு முறைகள் சென்று பார்த்து ஆராய்ந்துவிட்டுப் பிறகு முடியாது என்று சொன்ன நாங்கள், இந்த மார்வாடிப் பசு விஷயத்தில் ஐந்தே நிமிஷத்தில் சரி என்றோம். காரணம் அப்பா அம்மா இரண்டு பேருமாக அன்று மார்க்கெட் பக்கத்தில் மார்க்கெட்டை விடப் பலமடங்கு பெரிதான தினசரிக் காய்கறிச் சந்தையில் தெரிந்த காய்கறிக் காரன் ஒருவன், பக்கத்திலேயே ஒரு மாடு விற்பனைக்கு வந்தி ருக்கிறது என்று சொல்லி, அப்பா அம்மா இருவரையும் உடனே அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். அப்போதுதான் அந்த மாட்டைக் கறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பால் நுரை பொங்க ஜோடுதவலை நிறையக் கறந்திருக்கிறது. எங்களுடைய எருமைமாடுகள் கூட அவ்வளவு ஒரு நாளும் கறந்ததில்லை. அப்பா அம்மா இரண்டு பேரும் சரி என்று சொல்லி ஒரு ரூபாய் முன்பணம் கொடுத்து அடுத்த நாள் 299 ரூபாய் செலுத்தி, மாடு வீடு வந்து சேர்ந்தது. கூடவே ஒரு மாதத்தியம் கன்றுந்தான்.

Obwohl wir in den anderen Fällen nach drei oder viermaliger Überprüfung immer nein gesagt hatten, entschieden wir uns gleich nach fünf Minuten für diese 'Marwari-Kuh. Wieso? Ein Verkäufer am Markt, der meine Eltern kannte, sagte ihnen, als sie bei ihm Gemüse kauften, dass jemand in seiner Nachbarschaft eine Kuh verkaufen wollte und brachte sie zum Besitzer hin. Die Leute waren gerade dabei, die Kuh zu melken. Man konnte sehen, wie der Eimer mit schäumender Milch überlief. So viel Milch hatten unsere Büffel nie geliefert. Meine Eltern sagten sofort: "Ja", zahlten eine Rupie als Anzahlung, am nächsten Tag den Restbetrag 299 Rupien und brachten die Kuh und ihr einen Monat altes Kalb zu uns nach Hause.

மாடு வந்தவுடன் அம்மா அதற்குக் கர்ப்பூரம் காண்பித்துக் குங்குமமிட்டு 'லட்சுமி' என்று அழைத்தாள்.

"என்ன லட்சுமி?"

"மாட்டுக்குப் பேரு" என்று அம்மா சொன்னாள்.

"லட்சுமி இல்லேம்மா, சுந்தர்."

“சுந்தரா?”

'"ஆமாம்மா. அப்படித்தான் அந்த வீட்டிலேஇந்தமாட்டைக் கூப்பிட்டா."

“சுந்தர்னா? அது என்னபேரு?"

"ஆமாம்மா. நீ கவனிக்கலியா? சுந்தர், சுந்தர்னுதானே அந்த அம்மா தட்டித் தடவிக் கொடுத்தா? நான் கூப்பிடுறேன். பார். சுந்தர்!"

மாடு திரும்பிப் பார்த்தது.

Sobald die Kuh bei uns ankam, malte meine Mutter einen safrangelben Punkt auf ihre Stirn, schwenkte ein Stück brennenden Kampfer und gab ihr den Namen "Lakshmi“**.

"Was? Lakshmi?" fragte ich..

"Ja, so wird die Kuh heißen", sagte sie.

"Nicht Lakshmi, Mutter. Sundar."

"Sundar?" "

Ja, Mutter. So haben sie die Kuh genannt."

"Sundar! Was ist das für ein Name?"

"So heißt diese Kuh. Hast du die Leute dort nicht gehört? Hast du nicht gehört, wie die Frau in dem Haus zu der Kuh sagte "Sundar, Sundar" und sie liebkoste? Hör mal und paßt mal jetzt auf!" "Sundar" rief ich.

Die Kuh drehte sich zu mir.

"பார்த்தியா? சுந்தர்தான் இந்த மாட்டோட பேர்"

"ஆம்பளைப் போனா அது?"

"இது ஆம்பளை மாடுதானோ என்னவோ?"

"சீசீ, ரொம்பச் சமத்தாப் பேசாதே."

"Siehst du! Das ist ihr Name."

"Aber Sundar ist doch ein männlicher Name!"

"Vielleicht ist sie eine männliche Kuh", sagte ich.

"Unsinn! Sei doch kein Alleswisser!" erwiderte sie.

மாடு பெயரைச் சுந்தர் என்று வைத்துக்கொண்டது மட்டும் மனச்சங்கடம் விளைவித்தது என்றில்லை. அதன் காம்புகள் முழுக்கக் கறுப்பாக இருந்தன. காராம்பசுவின் பாலைக் கோயில் களில் தவிர வேறெங்கும் உபயோகப்படுத்தக் கூடாது என்று தான் எங்கள் வீட்டில் பேசிக் கொண்டார்கள். எனக்குக் காராம் பசு என்றால் எப்படி இருக்கும் என்று நன்றாகப் பார்த்தறியத் தெளிவு கிடையாது.

Es war nicht nur der Name "Sundar", der uns Kummer machte. Das. Euter der Kuh war ganz schwarz. Also ging es um die Frage, ob die Milch von einer Kuh mit schwarzem Euter doch nicht ausschließlich für den Gebrauch der Tempel gedacht war. Bis dahin ahnte ich nicht, dass es Kühe mit schwarzem Euter gibt, denn ich hatte mich nie mit diesem anatomischen Teil einer Kuh befaßt.

காராம்பசு என்றாலும் பசுதான். ஆதலால் மாதமொரு முறை கறந்த பாலை அப்படியே அபிஷேகத்துக்குக் கொடுத்தால் போதும் என்று தீர்மானித்தார்கள்.

Genaugenommen, wie das Euter war, schwarz oder rosa, ist eine Kuh unleugbar eine Kuh und bleibt auch immer eine Kuh, und wenn ich hinzufügen darf, Milch ist jedenfalls immer weiß. Also genügt es, so wurde entschieden, wenn man einmal im Monat die Tagesausbeute dem Tempel für die Ablution des Gottes zur Verfügung stellt.

மாட்டுக்குப் புதுப்பெயர் பழக்கப்பட வேண்டுமென்று எல்லாரும் அடிக்கடி கொல்லைப்புறம் போய் 'லட்சுமி' என்று கூப்பிட்டோம். பசு இதை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதே சமயத்தில் நிலை கொள்ளாமல் நாளெல்லாம் அங்கும் இங்கும் நகர்ந்த வண்ணமே இருந்தது.

Damit die Kuh sich an ihren neuen Namen gewöhnen konnte, gingen wir oft in den Hinterhof und riefen ihr zu: "Lakshmi! Lakshmi!" Die Kuh schien das aber gar nicht zur Kenntnis zu nehmen. Sie schien jedoch sehr angespannt zu sein und bewegte sich unentwegt hin und her.

மாலை வந்தது. பசுவை முதல் முறையாக வீட்டில் கறக்கப் போகிறோம். எருமை மாடுகள் பால் கொடுத்துக் கொண்டிருந்த நாட்களில் ஓர் ஆள் வந்து கறந்து கொண்டிருந்தான். அவனுக்குச் சொல்லி வைத்திருந்தும் இன்று வரவில்லை. அம்மாதான் ஒரு பெரிய பித்தளைச் செம்பை எடுத்துக்கொண்டு மாட்டிடம் சென்றாள்.

Es war abend. Wir machten uns daran, die Kuh zum ersten Mal zu melken. Der Mann, der unsere Büffel immer gemolken hat, sollte kommen und uns dabei helfen. Er kam aber nicht. Ausgerüstet mit einem großen Messinggefäß näherte sich meine Mutter der Kuh.

கன்றை நான் அவித்து விட்டேன். அது மாட்டின் மடியை முட்டி மாடு சுரப்பு விட்டவுடன் இழுத்துக் கட்டினேன். அம்மா மாட்டருகில் உட்கார்ந்து கொண்டு மடிக்காம்பைத் தொட்டாள். மாடு உதைத்தது.

Ich band das Kalb los. Sobald es das Euter an den Mund nahm, daran lutschte und die Milch aus dem Euter zu strömen begann, zog ich das Kalb weg und band es an einem Pflock. Meine Mutter setzte sich hin neben der Kuh und fasste das Euter an. Die Kuh versetzte ihr einen Tritt.

நான் கன்றை ஒரு முனையில் இழுத்துக் கட்டிவிட்டு, மாட்டின் பின்னங் காலகளைக் கட்ட ஒரு கயிற்றைத் தேடிச் சென்றேன். எருமை மாடுகளைக் கறக்கக் கால்களை என்றும் கட்ட நேர்ந்ததில்லை. அவை பால் தர விருப்பமில்லா விட்டால் நகர்ந்து கொள்ளும். ஆனால் காலைத் தூக்கி உதைத்ததில்லை.

Ich band das Kalb an dem Pflock fest und ging einen Strick suchen, um die Hinterbeine der Kuh zusammenzubinden. Wir hatten nie die Beine der Büffel festbinden müssen. Falls der Büffel keine Milch geben wollte, bewegte er sich von der Stelle fort, versetzte aber niemals einen Tritt.

எப்படியோ ஒரு கயிற்றைக் கண்டுபிடித்துக் காராம் பசுவின் கால்களைக் கட்டிய பிறகு நான் கொஞ்சமும் அம்மா கொஞ்ச முமாக அதைக் கறந்தோம். அம்மாவை அது கிட்ட நெருங்க விடாமல் மிகவும் முரண்டு பிடித்தது. அம்மா அது லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டதையும் பாராட்டாமல் நன்றாக நாலுஅடி முகத்திலும் முதுகிலும் போட்டாள். என்ன செய்தும் கடைசியில் மாலை காலாழாக்குப் பால்கூடக் கறக்கவில்லை.

Nachdem ich einen Strick gefunden und die Beine zusammengebunden hatte, gelang es meiner Mutter und mir, die Kuh langsam zu melken. Die Kuh wollte meine Mutter nicht in ihre Nähe kommen lassen. Ohne daran zu denken, daß sie eigentlich der Kuh liebevoll den Namen "Lakshmi" verliehen hatte, schlug meine Mutter sie hart, viermal aufs Gesicht und auf den Hintern. An diesem Abend gelang es uns, nur ein Fingerhut voll Milch zu ergattern.

அடுத்த நாள் காலையும் அப்படியே. அன்று மாலை இன்னும் மோசம். மாடு பாலே தரவில்லை.

Am nächsten Morgen war es genauso. Am Abend wurde es noch schlimmer. Den Tag danach gab es keinen einzigen Tropfen.

மாடு பொல்லாதது என்பதுடன் இன்னொன்றும் தெரிந்தது. அந்த மாடு எங்கள் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட முப்பத்தாறு மணி நேரம் ஆகியும் படுக்கவே இல்லை; நின்ற வண்ணமே இருந்தது. நாங்கள் வைத்த உடைத்த கடலை, பருத்திக் கொட்டை, தவிட்டைக் கூடச் சுவராசியமில்லாமல் சாப்பிட்டது. வேறு எதையும் தின்னவில்லை. இரண்டாவது நாள் அருகில் நெருங்க விடாமல் மாடு குதித்து ஆர்ப்பாட்டம் செய்த பிறகு, தான் அந்த மார்வாடி வீட்டுக்குப் போனேன்.

Nicht nur die Bösartigkeit dieser Kuh, sondern auch etwas anderes von ihr lernten wir kennen. Sie war bereits sechsunddreißig Stunden in unserem Haus, aber hatte sich überhaupt nicht hingelegt. Sie stand die ganze Zeit einfach da. Sie kaute die Linsen, Baumwollsamen und Kleie, die wir ihr vorsetzten, mit einer gewissen Gleichgültigkeit. Sie rührte auch sonst nichts an. Am nächsten Tag, als sie wieder großes Theater machte und keinen in ihre Nähe kommen ließ, entschloss ich mich, die Marwari-Familie aufzusuchen.

அந்தத் தெரு முழுக்க மார்வாடிக் குடும்பங்கள்தாம். சமண மதத்தினராதலால் பொழுது சாய்வதற்குள் சாப்பாட்டை முடித்து விளக்கை அணைத்து விட்டார்கள். வயதானவர்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். நான், நாங்கள் மாடு வாங்கிய வீட்டின் முன் பகுதியிலேயே கட்டப்பட்டிருந்த நான்கைந்து மாடுகளை அபாயகரமான முறையில் கடந்து, கீழே இருந்த சாணிக்குவியலில் ஒருமுறை காலை வைத்து, காராம் பசுவை எங்களுக்கு விற்றுவிட்ட குடும்பத்தை அந்த வீட்டில் கண்டுபிடித்தேன். வெளியே நின்றிருந்த அந்த அம்மாளிடம். "உங்கள் மாடு பால் கறக்கவிலலை" என்றேன்.

Jene Straße war voller Marwaris. Als gläubige Jains hatten sie schon vor der Dämmerung ihr Abendessen zu sich genommen und alle Lichter gelöscht. Alte Menschen hatten um ihren Mund ein Tuch gebunden. Ich ging auf eigene Gefahr durch den Vorhof, wo vier oder fünf Kühe lagen, trat nur einmal auf einen Misthaufen und konnte schließlich ausfindig machen, wo diejenigen wohnten, die uns die Bestie mit dem schwarzen Euter verkauft hatten. "Ihre Kuh gibt keine Milch", rief ich der Frau an der Tür zu.

'அதற்குத் தீனி வைத்தாயா?" அந்த அம்மாளின் வாய் முன்னால் தொங்கிய துணித் திரை கண் கொட்டாமல் பார்க்கக் கூடிய வகையில் படபடத்தது.

"Habt ihr sie gefüttert?", kam eine Stimme von hinten, von einer Person, die sich hinter einem Stück Leintuch befand, das als Vorhang diente.

"எதை வைத்தாலும் தின்பதில்லை; ஒரேயடியாக உதைக்கிறது."

அவள் வீட்டுக்குள்ளே திரும்பி உரத்த குரலில் கசகச புசபுச வென்று பொழிந்தாள். அப்புறம் பக்கத்து எல்லா இடத்திற்கும் சென்று செய்தி பரப்பினாள். 'சுந்தரைப் பட்டினிப் போட்டுக் கொல்லுகிறார்கள்' என்று போலச் சொன்னாள். எல்லாரும் என்னைச் சூழ்ந்து, கொண்டு "உங்களுக்கெல்லாம் இதயம் கிடையாதா?""நீங்கள் மாட்டைக் கொன்றுதான் தின்பீர்களா?""மாட்டைப் பட்டினி போட்டுச் சாகடித்தால் கோடி ஜன்மம் தலைகீழாக நெருப்பாற்றில் வெந்து கொண்டிருக்க வேண்டுமே" என்றெல்லாம் கேட்டார்கள்.

"Sie isst nichts und versetzt nur Tritte."

Die Frau drehte sich nach innen um und fing eine Tirade an, ihr Ton war recht laut. Dann ging sie in der Nachbarschaft herum und verbreitete die Nachricht.

"Sie lassen Sundar verhungern", schien sie zu sagen. Alle umzingelten mich. "Habt ihr kein Herz?", wollten sie wissen. "Könnt ihr eine Kuh nur essen? Ihr werdet bei Millionen Wiedergeburten mit dem Kopf nach unten in Flüssen von Feuern in der Hölle zum Sieden gebracht, wenn ihr eine Kuh verhungern lässt und somit tötet. Wisst ihr das nicht?"

அந்த அம்மாள் என்கூடக் கிளம்பினாள். வருகிற வழி யெல்லாம் தெருவில் போவோர் வருவோரிடம் என்னைச் சுட்டிக்காட்டி அவளுடைய மாட்டை நான் பட்டினி போட்டுச் சாகடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவளுடைய மொழியில் அறிவித்த வண்ணம் வந்தாள். எப்படி ஒரே விஷயத்தை மணிக் கணக்கில் இந்த அம்மாள் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

Die Frau begleitete mich. Unterwegs erzählte sie in ihrer Sprache allen Leuten auf der Straße, dass ich ihre Kuh verhungern lasse. Ich konnte nicht begreifen, wieso ein Mensch stundenlang so etwas unermüdlich wiederholen konnte. Wir waren endlich bei uns zu Hause.

மாடு அவளைக் கண்டு குதியாகக் குதித்தது: கத்திற்று: வாலைத் தூக்கிச் சிறுநீர் கழித்தது: உலகத்தையே ஊதித் தள்ளிவிடுவது போல மூச்சுவிட்டது.

Die Kuh sprang auf, als sie die Frau sah, muhte, hob ihren Schwanz hoch und ließ Wasser. Dabei seufzte sie so, als ob sie die ganze Welt damit wegblasen konnte.

அந்த மார்வாடி அம்மாள், "சுந்தர்!" என்று கத்திக் கொண்டு தழுவிக் கொண்டாள். தன்னுடைய வாய்த் துணியை விலக்கி விட்டு மாட்டுக்கு முத்தம் கொடுத்தாள். மாட்டின் காதருகில் இருந்த ஓர் உண்ணியைப் பிடுங்கித் தரையில் எறிந்து காலால் தேய்த்தாள். "சுந்தர், மேரே சுந்தர்'' என்று கொஞ்சிய வண்ணம் இருந்தாள். இந்தக் காட்சியைக் கண்டு அழுகை வரும் போல இருந்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் அழுதே விட்டார்கள்.

Die Marwari-Frau heulte "Sundar" und umarmte die Kuh. Sie nahm ihr Mundtuch weg, küßte die Kuh, pflückte einen Floh von einem ihrer Ohren, warf ihn auf den Boden und stampfte darauf. Sie liebkoste die Kuh: "Sundar, mein Schatz Sundar!" Dieser Anblick war jedem genug, um zu Tränen gerührt zu sein. Tatsächlich fingen meine Geschwister an, zu weinen.

எங்கள் அம்மாதான் அசையாமல் இருந்தாள். சற்றும் எதிர்பாராத முறையில் கத்த ஆரம்பித்தாள்; "என்னன்னு நினைச்சுண்டு இப்படி ஒரு மாட்டை எங்க தலையிலே கட்டினே? பணத்தைக் கீழே வைச்சுட்டு இழுத்துண்டு போ உன் மாட்டை!"

Nur meine Mutter blieb hart wie Stein und schrie völlig unerwartet die Marwari-Frau an: "Warum habt ihr uns diese Bestie an den Hals gehängt? Raus mit unserem Geld und ab mit dem Vieh!"

"மாட்டுக்குத் தீனி போடாவிட்டால் எப்படிப் பால் தரும்? மாட்டைப் பட்டினி போட்டுக் கொன்றால் கோடி ஜன்மம் தலைகீழாக நெருப்பாற்றில் வேக வேண்டும்" என்றாள் அவள் பதிலுக்கு.

"Wie kann eine Kuh Milch geben, wenn man sie verhungern lässt?", erwiderte die Marwari-Frau. "Ihr werdet bei Millionen Wiedergeburten mit dem Kopf nach unten in Flüssen von Feuern in der Hölle zum Sieden gebracht, wenn ihr eine Kuh so verhungern lässt und tötet. Wisst ihr das nicht?“

எங்கள் அம்மாவுக்கு இவ்வளவு ஆற்றல் உண்டு என்று எங்களில் யாருக்கும் தெரியாது. கால்மணி நேரம் பொரிந்து கொட்டியதில் அந்த மார்வாடி அம்மாளும் அடங்கிப் போனாள். "ஒரு பாத்திரம் தா" என்றாள் சமாதானமாக.

Keiner von uns wusste bis dahin, dass unsere Mutter so energisch werden konnte. Sogar die Marwari-Frau wurde vom Ausbruch unserer Mutter für etwa eine Viertelstunde zum Schweigen gebracht. "Gebt mir einen Topf!" sagte die Frau dann versöhnlich.

மாட்டின் காலைக் கட்டாமல் கன்றுக்குச் சொட்டுப்பாலை விட்டு அந்த அம்மாள் அந்தக் காராம்பசுவைக் கறந்தாள். ஒரு செம்பு நிறையக் கறந்து அப்புறம் இன்னொரு பாத்திரத்திலும் கறந்தாள். இப்போது எங்கள் அம்மா அவ்வளவு சுத்தவில்லை. நாங்கள் எல்லோரும் அன்றிரவு படுக்கப் போகுமுன் பால் சாப்பிட்டோம்.

Ohne die Beine der Kuh festzubinden und nachdem sie dem Kalb ein paar Tropfen Milch gegönnt hatte, melkte die Frau die Kuh. Im Nu wurde ein Topf voll. Es gab sogar noch mehr für einen zweiten Topf. Meine Mutter hatte sich nun wieder beruhigt. Wir konnten alle in dieser Nacht Milch trinken, bevor wir ins Bett gingen.

எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்துக்கு இரவில் விளக்கில் லாமல் போக முடியாது. காரணம் சமையலறையை விட்டால் எட்டுப் பத்துப் படிகள் கீழே இறங்கினவுடன்தான் தரை தட்டும். ஆனால் வாசல் புறம் அப்படி இருக்காது. இரண்டே படிதான். ஆதலால் இயற்கையாகவே மேடு பள்ளமாக இருந்த இடத்தில் பள்ளத்தைத் தூர்க்காமல் வீடு கட்டியிருந்தார்கள். கொல்லையில் பெரிய மாட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் உயரமான சுவர். எங்கள் வீட்டிலேயே மிகவும் பலமான கதவு இந்தக் கொல்லைச் சுற்றுச்சுவர்க் கதவுதான்.

Wer in der Nacht zum hinteren Teil unseres Hauses gehen wollte brauchte unbedingt eine Laterne, denn von der Küche führten dorthin etwa zehn bis zwölf Treppen hinunter. Erst dann war man wieder auf dem Grundstück. Im vorderen Teil des Hauses sah es anders aus. An der Haustür gab es nur zwei Treppen. Das Haus hatte man auf einem Grundstück gebaut, das sich vorne und hinten nicht auf gleicher Höhe befand. Man hatte nicht daran gedacht, es vorher einzuebnen. Der Kuhstall im Hinterteil des Hauses war von einer hohen Mauer umgeben. Eine massive Tür trennte die Küche und den Hinterhof.

இரவு படுக்கப் போகுமுன் எங்களில் யாராவது ஒருவர் இந்தக் கொல்லைக் கதவைப் பெரிய பூட்டு ஒன்று மாட்டிப் பூட்டிவிட்டு வருவோம். அன்றிரவு நான்தான் ஒரு கோழி முட்டை விளக்குச் சகிதம் போய்க் கதவைப் பூட்டி விட்டு வந்தேன். காராம்பசு முதல் முறையாக எங்கள் வீட்டில் படுத்தி ருந்தது. அதுமட்டும் அல்ல, அசையும் போட்டுக் கொண்டி ருந்தது. ஒரு வழியாக அது எங்கள் குடும்ப இயக்கத்தோடு இணைந்துவிட்டது என்று தோன்றிற்று. "சுந்தர்!" என்று கூப்பிட்டு அதன் தலையைச் சொரிந்து கொடுத்துவிட்டு வந்தேன்.

Einer von uns schloß jeden Tag diese Tür ab, bevor wir alle ins Bett gingen. Mit Hilfe einer kleinen Laterne hatte ich an jenem Abend diesen Auftrag ausgeführt. Die Kuh mit dem schwarzen Euter lag kauend da und schaute sogar glücklich aus. Es sah so aus, als ob sie sich damit abgefunden hatte, mit uns zu leben. Ich sagte "Sundar" zu ihr, kratzte ihren Kopf und ging in das Haus zurück.

காலையில் அம்மா போட்ட கூக்குரலில் எல்லாரும் எழுந்து விட்டார்கள். இரவே சுந்தர் கயிற்றை அறுத்துக் கொண்டிருக்க வேண்டும். சமையலறைப் பின்புறக் கதவை அம்மா திறந்தவுடன் அத்தனை படியையும் ஒரே தாவலில் தாவிச் சமையலறைக்குள் வந்து விட்டது. அம்மா பயந்து கொண்டு அலறியது அதற்குத் தான். இந்தப் பொல்லாத மாட்டை அடக்கக் கூடியவர்கள் அந்த வேளையில் யாராவது கிடைப்பார்களா என்று அப்பா வாசல் கதவைத் திறந்திருக்கிறார். சுந்தர் வாசல் கதவு திறக்கப் பட்டவுடன் வெளியே பாய்ந்தது. நாங்கள் எல்லாரும் அதைத் துரத்தி பிடிக்கலாமா, அது சாத்தியமா என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கையில் நான்கு கால் பாய்ச்சலில் மார்க்கெட் இருக்கும் திசையில் ஓடிப் பார்வைக் கெட்டாமல் போய் விட்டது.

Das Geschrei meiner Mutter am nächsten Morgen rüttelte uns alle wach aus unseren Betten. Sundar hatte sich in der Nacht losgerissen. Als meine Mutter die Hintertür öffnete, lief Sundar im Nu alle Treppen herauf und stürmte in die Küche. Meine Mutter schrie. Mein Vater öffnete die Haustür vorne mit der Hoffnung, jemand zu finden, der dieses gemeine Geschöpf überwältigen könnte. In dem Augenblick, wo die Tür aufgemacht wurde, sprang Sundar aus dem Haus und lief weg. Während wir uns überlegten, ob wir sie verfolgen sollten und welche Chancen wir hatten, sie wieder einzufangen, galoppierte sie davon Richtung Markt und war nicht mehr zu sehen.

அம்மா அந்த மார்வாடிக்காரியை வைதாள். மாட்டை வைதாள். காய்கறிக்காரனை வைதாள். என்னையும் வைதாள், ஓடுகிற மாட்டைக் கழியால் ஒரு போடு போட்டு வீட்டுப் பக்கம் திருப்பத் தவறியதற்கு. அரை மணி கழித்துக் கன்றுக் குட்டியை யும் ஒட்டிக்கொண்டு பாத்திரத்துடன் மார்வாடி வீட்டுக்குக் கிளம்பினேன்.

Meine Mutter verfluchte die Marwari-Frau, fluchte über die Kuh, beschimpfte den Gemüseverkäufer und schalt mich auch obendrein. Ich hatte ja immerhin versagt, die laufende Kuh mit einem Stock zu schlagen und zur Umkehr zu bewegen. Nach einer halben Stunde verließ ich das Haus, das Kalb mit mir ziehend und mit einem Topf in meiner Hand.

அந்த அம்மாள் வட்டியும் முதலுமாக என்னைப் பார்த்து கூச்சலிட்டாள். அதற்குள் எப்படியோ எனக்கு இந்த மாடு விஷயத்தில் ஒரு குற்ற உணர்ச்சி வந்துவிட்டது. ஆராய்ந்து பார்த்தால் அதற்கு இடமே இருக்கக் கூடாது. அவள் விற்பதாக முன் வந்துதான் நாங்கள் அந்த மாட்டை வாங்கினோம். அவள் சொன்ன விலையை அப்படியே கொடுத்திருக்கிறோம். அவள் என்னையோ எங்கள் வீட்டாரையோ பார்த்துக் கத்த என்ன நியாயம் இருக்கிறது?

Die Marwari Frau schrie mich mächtig an. Irgendwie hatte ich mittlerweile Schuldgefühle in der ganzen Angelegenheit. Eigentlich gab es keinen Grund dafür. Wir hatten die Kuh gekauft, nur weil die Frau sie verkaufen wollte. Wir gaben ihr auch den Preis, den sie verlangte, keine Rupie weniger. Woher nahm sie sich das Recht, uns anzuschreien?

அதெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. ஒரு மாதிரி குறுகிப் போய், "மாட்டைக் கறந்து கொண்டு போகிறேன்" என்றேன். அந்த அம்மாள் ஒரு ராஜ்யத்தையே தானம் செய்வது போல, "உம்" என்றாள். நான் சுந்தரைக் கறக்க உட்காருவதைக் கண்டு ஏழெட்டுச் சிறுவர் சிறுமியர்கள். ஐந்தாறு என்னைச் சுற்றி நின்றார்கள். இதில் ஓர் ஆச்சரியம், சுந்தர் பெரியவர்கள் என்னை உதைக்கவில்லை. நான் வீடு திரும்பியபோது, "மாடு எங்கே?” என்று அம்மா கேட்டாள். நான் பாலை நீட்டினேன். அதை வாங்கிக்கொண்டு, "மாடு எங்கே?" என்று மீண்டும் கேட்டாள்.

Aber an das alles dachte ich nicht. Im Gegenteil, ich gab klein bei und fragte: "Darf ich die Kuh melken?" Die Frau sagte majestätisch, als ob sie mir ein Königreich schenkte: "Sie dürfen." Sieben oder acht Bengel und fünf bis sechs Erwachsene standen nun herum und schauten mir beim Melken zu. Ich war darüber erstaunt, dass Sundar mir keinen Tritt versetzte. Als ich zu Hause ankam, fragte mich meine Mutter: "Wo ist die Kuh?" Ich zeigte ihr die Milch vor. Sie nahm sie und fragte nochmals: "Wo ist die Kuh?"

"என்னால் இப்போ ஓட்டிண்டு வரமுடியலை. சாயந்திரம் ஓட்டிண்டு வரேன்."

"Ich konnte die Kuh nicht mitbringen. Ich werde sie heute Abend holen", sagte ich.

அம்மா என்னைச் சந்தேகத்தோடு பார்த்தாள். மாட்டுக் காகக் கொடுத்த பணத்தை அந்தப் பிடாரியிடமிருந்து உடனே திரும்பி வாங்கி வரும்படி அப்பாவிடம் சொன்னாள். அப்பா பதிலே பேசாமல் இருந்தார்.

Meine Mutter schaute mich skeptisch an. Sie forderte meinen Vater auf, von der Marwari Frau, der Hexe, das Geld, was sie uns abgeknöpft hatte, sofort zurückzuholen. Mein Vater sagte nichts.

மாலையில் நான் பால் கறக்கப் போனபோது மாடு மிகவும் குறைவாகக் கறந்தது. போதாததற்குப் பால் ஒரு மாதிரியாக நாற்றமும் எடுத்தது. எனக்கு உடனே தெரியாவிட்டாலும் பிறகு காரணம் தெரிந்து விட்டது.

Als ich am Abend zurückging und die Kuh melkte, gab es sehr wenig Milch. Hinzu kam, dass sie stank. Der Grund dafür war mir nicht sofort klar. Ich habe ihn später erfahren.

பகல் பொழுதில் காய்கறிச் சந்தையைச் சுற்றி வரும் சுந்தர் குப்பைத் தொட்டிகளையும் விட்டு விடுவதில்லை. மார்வாடிக்காரி மாட்டுத் தீனி என்று ஒன்றும் வைப்பதில்லை. அந்த பொறுப்பு எங்கள் ஊர் முந் நூற்றுச் சொச்சம் காய்கறிக்கார்களையும் மார்க்கெட்டைச் சுற்றி யுள்ள ஐந்தாறு குப்பைத் தொட்டிகளையும் சார்ந்தது.

Sundar hatte sich den ganzen Tag auf den Straßen herumgetrieben und ausnahmslos allen Gemüseläden und Mülltonnen große Beachtung geschenkt. Die Marwari-Frau hatte der Kuh nichts zum Fressen gegeben. Diese Verantwortung wurde eben auf etwa dreihundert Gemüseverkäufer unserer Stadt und die fünf oder sechs Mülltonnen auf dem Marktplatz übertragen.

இந்த முறை அம்மா என்னை வைது திட்ட நிறையக் காரணங்கள் இருந்தும் நான் தைரியமாகச் சொன்னேன்: "மாடு அங்கேயே இருந்துடட்டும்மா! அது அங்கேதான் சந்தோஷமாக இருக்கு."

Dieses Mal, obwohl meine Mutter mehrere Gründe hatte, auf mich zu schimpfen, faßte ich Mut und sagte meine Meinung: "Laß die Kuh dort bleiben, Mutter", sagte ich, "Sie scheint sich nur dort wohl zu fühlen."

"விலை கொடுத்து வாங்கின மாடு இன்னொருத்தி வீட்டிலே இருக்கிறதாவது! எதுக்கடா அந்த மோசக்காரி காசை வாங்கிண்டா? ஒவ்வொரு வேளையும் அங்கே போய்ப் போய்க் கறந்துண்டு வர்றதுக்கு ஒழுங்கா எங்கேயாவது பாலையே வாங்கிண்டு வந்துடலாமே! மாடு அங்கே இருக்கிறதாவது? அவ வேறே பாதிப் பாலைக் கறந்துண்டுடறா! பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு மாட்டை நீயே கட்டிண்டு அழுன்னா மட்டும் வாயைத் திறக்காமே ஓடிப்போறா!'

"Red keinen Unsinn! Haben wir für die Kuh bezahlt, damit sie bei anderen Leuten bleibt? Warum hat diese hinterhältige Frau unser Geld angenommen? Stattdessen jedes mal dorthin gehen, um die Kuh zu melken, können wir ja Milch von anderswo kaufen. Wieso soll die ah dort bleiben? Ich bin sicher, diese Frau nimmt sich die Hälfte unserer Milch weg. Warum sagt sie kein Wort, wenn ich sage: "Gib mir mein Geld wieder und nimm deine verdammte Kuh zurück!"?"

அப்பா இந்த மாடு விஷயத்தில் அப்புறம் தலையிட்டுக் கொள்ளவேயில்லை. அடுத்த நாள் நான் பள்ளிக்குப் போகாமல் அம்மாவுடன்கூடப் போய் மாட்டை இழுத்துக்கொண்டு வருவது என்று தீர்மானமாயிற்று. சுந்தரை இழுத்துக்கொண்டு வருவதாம்!

Mein Vater sprach kein Wort mehr in dieser Angelegenheit. Es wurde beschlossen, dass ich am nächsten Tag die Schule schwänzen sollte, um mit meiner Mutter dorthin zu gehen und die Kuh notfalls mit Gewalt zurückzuholen.

விடிகாலையில் போய்மாட்டைக் கறந்து கொண்டு வந்தேன். இப்போதும் பால் மிகவும் குறைவாகச் கறந்தது. கன்றுக்குட்டி ஊட்டிவிட்டது என்று அந்த அம்மாள் சொன்னாள். பால் சகிக்க முடியாமல் நாறியது.

Am nächsten Tag früh am Morgen ging ich wieder hin und melkte die Kuh. Auch dieses Mal gab es zu wenig Milch. Die Frau meinte, das Kalb hätte zu viel Milch getrunken. Die Milch stank fürchterlich.

பகல் சாப்பாடு முடிந்தவுடன் அம்மா, "கிளம்புடா", என்றாள். இரண்டே நபர்கள் சிருஷ்டிக்கும் ஒரு கடும் பூகம்பத்தைப் பக்கத்திலிருந்து நிகழ்த்தித் தரும் பயங்கர வாய்ப்பு என் தலைமேல் திணிக்கப்பட்டதைத் தவிர்க்க முடியாமல் அரைப் பிரக்ஞை நிலையில் அம்மாவுடன் அந்த வெயில் நேரத்தில், ஒன்றரை மைல் தள்ளியிருக்கும் மார்க்கெட்டை நோக்கி நடந்தேன்.

Nach dem Mittagessen sagte meine Mutter: "Komm mit!" Ein 'Erdbeben' verursacht von zwei Frauen stand bevor. Ich sollte als Zuschauer und Mitbeteiligter dabei sein. Ich konnte diese Verantwortung nicht von mir abschütteln. Halbwegs benommen begleitete ich meine Mutter in der Hitze zum Markt, der anderthalb Meilen von unserem Haus entfernt lag.

பூகம்பம் நிகழ்ந்தது. மார்க்கெட் பிரதேசமே அந்த மார்வாடி வீட்டில் கூடியது. இரு மொழிகள், பெண்பாலாரால் பயன் படுத்தக்கூடும் அதி உச்ச வேகத்தை அடைந்தன என்றே கூற வேண்டும். எனக்கு என் அம்மாதான் ஒவ்வொரு சமயத்தில் ஓங்கியிருந்தாள் எனத் தோன்றிற்று. “பணத்தைக் கீழே வைச் சுட்டு என் மாட்டை நீயே கட்டிண்டு மாரடிச்சுக்கோடீ" என்று அம்மா சொன்ன போதெல்லாம் மார்வாடி அம்மாள் சற்றுச் செயலிழந்து காணப்பட்டதாகவே தோன்றிற்று.

Die Erde bebte. Alle in der Marktgegend versammelten sich im Haus der Marwari Familie. Beide Frauen schrien sich in zwei verschiedenen Sprachen und zwar jeweils in ihrer höchsten Tonlage an. Ich hatte das Gefühl, dass meine Mutter die Oberhand behielt. Jedes Mal als meine Mutter sagte: "Heraus mit meinem Geld und dann können Sie sich wieder an Ihre verdammte Kuh klammern!", sah die Marwari-Frau etwas verdutzt aus.

ஐம்பது பேர்கள் கூடி மத்யஸ்தம். இனி நாங்கள் மாட்டைஓட்டிக் கொண்டு போகலாம். ஆனால் மாடு வர வேண்டுமே?

Fünfzig Leute, die dort herumlungerten, bewirkten am Ende einen Kompromiss. Wir durften die Kuh mitnehmen. Aber würde sie mitkommen?

ஒவ்வொரு முறை நான் சுந்தரிடம் சென்று அதைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க முயன்ற போதும் அந்த மார் வாடி அம்மாள் ஓடிவந்து மாட்டைக் கட்டிக் கொண்டு ஒப்பாரி வைப்பாள். அம்மா, "பணத்தை..." என்று சொன்னவுடன் ஒதுங்கிக் கொள்வாள். சுந்தர் திமிறிக் குதித்து என்னை நெருங்க விடாமல் ஆர்ப்பாட்டம் செய்தது.

Jedes Mal, als ich mich der Kuh näherte und versuchte, sie loszubinden, lief die Marwari-Frau zu ihr, umarmte sie und heulte. Aber sie entfernte sich von Sundar, sobald meine Mutter ihre Aufforderung wiederholte: "Heraus mit dem Geld!" Mittlerweile sprang die Kuh wild herum und ließ mich nicht in ihre Nähe kommen.

அம்மாவுக்கு அப்போது திடீரென்று ஒரு யுக்தி மின்னல் வீசியிருக்க வேண்டும். "ஒத்தை மாட்டு வண்டி ஓட்டிண்டு வாடா'' என்றாள்.

நான், "சுந்தரை வண்டிக்குள்ளே எப்படி ஏத்தறது?" என்றேன்.

Meine Mutter hatte blitzartig eine Idee. Sie sagte: "Hol mal einen Ochsenkarren!". "Wie willst du Sundar auf den Karren laden?", fragte ich.

"வண்டி ஓட்டிண்டு வாடான்னா என்னடா அதிகப்பிரசங்கித்தனம் பண்ணறே?" என்று அம்மா சிற, நான்நகர்ந்தேன்.

"Spar dir deine Wörter, du Klugscheißer! Ich will, daß du sofort einen Ochsenkarren holst!", brüllte sie mich an.

வண்டி வந்தவுடன் அம்மா ஏறிக் கொண்டாள். கன்றுக் குட்டியைத் தூக்கி வைத்துக் கொண்டாள். என்னையும் ஏறிக் கொள்ளச் சொன்னாள். அங்கிருந்தவர்களில் ஒருவரிடம் சுந்தரை அவிழ்த்து அதன் கழுத்துக் கயிற்றைத் தன்னிடம் தரச் சொன்னாள். அதை அப்படியே வண்டிக்குப்பின்னால் இருக்கும் தடுப்புக் கம்பியில் கட்டினாள். சுந்தர் திமிறி அறுத்துக் கொண்டு போகும் கணத்தை நான் எதிர்பார்த்து உட்கார்ந்தேன். ஆனால் வண்டி நகர அதன் பின்னர் சுந்தர் பரம சாதுவாக வந்தது.

Sobald der Ochsenkarren da war, hob meine Mutter das Kalb hoch. und stieg mit um in den Karren ein. Sie wollte, dass ich auch einstieg. Sie bat einen der Zuschauer, Sundar loszubinden und ihr den Strick zu geben. Sie band den Strick an die Metallstange fest, die hinten am Karen angebracht war. Ich erwartete jeden Augenblick, das Sundar sich losriss. Aber die Kuh folgte dem Karren artig, als dieser sich bewegte.

இதன் பிறகு இரு வார காலத்தில் ஐந்தாறு முறை சுந்தர் அறுத்துக்கொண்டு மார்வாடி வீட்டுக்கு ஓடிப்போயிற்று. ஒவ்வொரு முறையும் ஒற்றை மாட்டுவண்டி அமர்த்திக் கொண்டு திருப்பி ஓட்டிக்கொண்டு வந்தேன். காய்கறிச் சந்தையில் சுதந்திரமாகச் சுற்றி, குப்பைத் தொட்டிகளைக் குடைந்து தின்று வாழ்வதைக் காட்டிலும் தனியாக விசாலமான கொட்டகையில் புல், பருத்திக் கொட்டை, புண்ணாக்கை அமைதியாகத் தின்று கொண்டு இருநூறு சதுர அடியில் காலம் கழிக்க அதற்கு மனம் இல்லாததை ஒரு மாதிரி என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு மாதம் நிரம்பாத கன்றை விட்டுக்கூட ஓடிப் போக வேண்டு மென்றால், சந்தை இரைச்சல் அதற்கு எவ்வளவு அத்தியாவசிய மானதாக இருக்க வேண்டும்! எவ்வளவோ நல்ல காரணங் களுக்கே மனிதர்களால் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ள இயலவில்லை. கேவலம், எஜமானன் மாறியிருக்கிறான் என்பதற் காக மட்டும் ஒரு மாட்டை அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளும்படி நிர்ப்பந்திப்பது எவ்வளவு அநியாயம்?

In den darauffolgenden zwei Wochen riß sich Sundar fünf oder sechsmal los und rannte weg zu der Marwari-Familie. Ich brachte sie jedes Mal zurück – unter Einsatz eines Ochsenkarrens, versteht sich! Ich konnte in gewisser Hinsicht verstehen, daß Sundar lieber auf dem Gemüsemarkt frei herumlaufen und in den Mülltonnen herumwühlen wollte, als friedlich in einem großen Stall zu liegen und Gras, Baumwollsamen und Ölkuchen zu kauen. Ihre Bereitschaft, durchaus auf ihr einjähriges Kalb zu verzichten, zeigte, wie wichtig der Lärm auf dem Marktplatz für ihre Existenz war! Immerhin sind die Menschen nicht in der Lage, für eine gute Sache ihre Natur zu ändern. Ist es denn nicht ungerecht, von einer Kuh zu verlangen, dass sie ihre Natur ändert, jedes Mal, wenn sie den Besitzer wechselt?

இன்னும் சிறிது நாட்களில், எங்களுக்கு இந்த மாடு வாய்த்தது போதும் போதுமென்றாகி விட்டது. மார்வாடி அம்மாள் பணத்தைத் திருப்பித் தரமாட்டாள். சமயம் கிடைத்த போதெல்லாம் மாடு அறுத்துக்கொண்டு முந்தைய எஜமானியை நக்கிக் கொடுக்க ஓடிப்போய்விடும். கறக்கும் பாலும் கணிசமாகக் குறைந்து விட்டது. மாடோ காராம்பசு. இத்தனை நாட்கள் அதன் பாலைக் குடித்ததற்கே எவ்வளவு தோஷம் குவிந்திருக் கிறதோ? விற்றுத் தொலைந்து விட்டால் தேவலை.

Als Besitzer einer Kuh hatten wir bald genug davon. Wir hatten die geringste Aussicht, von der Marwari-Frau unser Geld zurückzubekommen. Aber die Kuh riß sich weiterhin bei jeder Gelegenheit wieder los, lief zurück zu ihrer ehemaligen Besitzerin, um sie zu lecken. Sie lieferte auch immer weniger und weniger Milch. Es war doch eine Kuh mit schwarzem Euter. Vielleicht sah es auch mittlerweile mit unserer Sündenlast nicht gut aus? Wir hatten ja an allen diesen Tagen ihre Milch getrunken! Lieber verkaufen!

இதை வாங்குவதற்கும் ஒருவர் வந்து சேர்ந்தார். பரம சாதுவாக இருந்தார். நாங்கள் மாட்டை முந்நூற்றைம்பதுக்கு வாங்கி அவருக்க முந்நூறுக்கு விற்பதாகச் சொன்னோம். அவர் மறுபேச்சுப் பேசாமல் ஒத்துக் கொண்டார். ஒருநாள் மாலை இரண்டு ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து கன்றையும் மாட்டையும் ஒட்டிக் கொண்டு போனார்.

In der Tat kam einer, um die Kuh zu kaufen. Eine Seele von einem Menschen! Wir sagten ihm, wir hätten die Kuh für 350 Rupien gekauft und würden sie für 300 Rupien verkaufen. Ohne viele Worte zu machen, war er sofort einverstanden. Eines Abends kam er mit zwei Leuten und nahm das Kalb und die Kuh mit.

அன்றிரவு அப்பாவிடம் கேட்டேன்: "ஏம்பா, சுந்தர் அடிக்கடி அறுத்துண்டு மார்வாடி வீட்டுக்குப் போயிடும்னு சொன்னியா?"

அப்பா பதில் சொல்லாமல் வேறேதோ கவனமாக இருந்து விட்டார். அவர் சாதாரணமாக அப்படி நடந்து கொள்வது கிடையாது.

அம்மாவைக் கேட்டேன். அம்மா எரிந்து விழுந்தாள், "சுந்தராம், சுந்தர்! என்னடா சுந்தர்? வீட்டைப் பிடிச்ச கிரக சாரம் ஒழிந்தது."

Diese Nacht fragte ich meinen Vater: "Hast du erzählt, dass Sundar sich oft losreißen und zu der Marwari-Familie rennen wird?" Mein Vater war in anderen Gedanken und antwortete nicht. Das war nicht normalerweise sein Stil. Ich fragte die Mutter. Sie schäumte vor Wut und sagte: "Sundar, Sundar! Was soll das? Seien wir froh, dass wir den Fluch losgeworden sind!"

''அது சரி, இப்போ புதுசா வாங்கியிருக்காரே, அவருக்குச் சொன்னேளா? மாடு காணாமே போயிடுத்துன்னா மார்க் கெட்டிலே போய்ப் பாக்கணும்னாவது சொல்ல வேண்டாமா?" அம்மா அதற்குப் பதில் சொல்லாமல் என்னை வைதாள்."சுந்தராம் சுந்தர்! பந்தர்!"

"Schon gut, aber habt ihr dem neuen Besitzer Bescheid gesagt, dass er auf dem Markt suchen soll, falls die Kuh wieder mal verschwindet?" Die Mutter beantwortete diese Frage nicht und schimpfte auf mich: "Sundar! Sundar! Eigentlich soll die Kuh heißen "Bandhar***".

நல்லவேளை, இப்படி அந்த மார்வாடி வீட்டில் அவன் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இல்லா விட்டால் என் பச்சைக் குழந்தையைக் குரங்கு என்று சொல் கிறாளே இந்தக் கொலைகாரி என்று அந்த மார்வாடி அம்மாள் ஏகமாக அலறியிருப்பாள்.

இரவு கொல்லைக் கதவை நான்தான் பூட்டிவிட்டு வந்தேன். இவ்வளவு கலாட்டாவில் சுந்தர் என்னை ஒரு துரும்பாகக் கூட மதித்தது கிடையாது. அப்படியிருந்தும் நான் தான் அதன் பெயரைச் சொல்லி அதை நினைத்தேன். பேசினேன். அதனிடம் உள்ள ஏதோ ஒரு குணம் என்னை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும்.

"Gott sei Dank!", dachte ich, "So etwas hat sie nicht im Haus der Marwari-Familie gesagt!" Wenn das der Fall wäre, hätte die Marwari-Frau sicher fürchterlich geheult wie eine Mutter, der man gesagt hat, ihr Kind sei doch ein Affe! Ich war derjenige, der die Hintertür immer abschloss, Sundar schenkte mir keine Beachtung während des ganzen Tumults. Ich war derjenige, der sie immer mit Namen anredete und zu ihr auch liebevoll sprach. Irgend etwas in ihrem Wesen muss mich fasziniert haben.

எனக்கு அதன் புது எஜமானரை எண்ணிப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஒரு கேள்விக் கேட்காமல் பணத்தை எண்ணிப் பார்த்துக் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிப் போனார். அது அவர் மாட்டுத் தொழுவத்தில் இருக்கிறதோ, மார்க்கெட்டுக்கு அறுத்துக்கொண்டு ஓடிப் போய்விட்டதோ!

Ich hatte Mitleid mit ihrem neuen Besitzer. Ohne ein Wort zu sagen, hatte er das Geld abgezählt, uns gegeben und die Kuh mitgenommen. Wer weiß, ob sie immer noch bei ihm im Stall war oder sich bereits losgerissen auf dem Weg zum Markt befand?

னக்குத் தூக்கமே வராததில் சுந்தர் நிச்சயம் மார்வாடிவீட்டுக்கு ஓடிப் போயிருக்கும் என்றே திரும்பத் திரும்பத் தோன்றிற்று. எப்படியும் காலையில் மாட்டைத் தேடிக்கொண்டு அந்த மனிதர் இங்கும் வருவார். இங்கிருந்தே ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக்கொண்டு போக வேண்டும். இப்போதே அவர் இங்கேதான் வந்து கொண்டிருக்கிறாரோ?

In meiner Schlaflosigkeit dachte ich immer wieder, Sundar wird sich wohl von ihrem neuen Besitzer getrennt haben und zu der Marwari-Familie gelaufen sein. Sicher würde der Mann morgen auf der Suche nach seiner Kuh bei uns erscheinen. Vielleicht sollte man einen Ochsenkarren schon von hier mieten. Vielleicht ist der Mann gerade jetzt auf dem Weg hierher zu uns.

காலையில் எங்கள் வீட்டுக் கதவைத் திறந்தபோது அவர் காணப்படவில்லை. கழுத்துக் கயிறு அறுந்து தொங்கச் சுந்தர்தான் நின்றிருந்தது.

Als ich am nächsten Morgen die Haustür öffnete, war der Mann nicht da. Mit einem abgerissenen Strick, der von ihrem Hals herunter hing, stand Sundar vor mir.

(1) Unser besonderer Dank gilt Frau Kamala Iyer, die den Text zweisprachig arrangierte.

(1) Special thanks to Mrs. Kamala Iyer who helped to arrange this text bilingually.

Glossary

* "Sundar" =

ein ind. männlicher Name und bedeutet "der Schöne" / "der Hübsche".

** Lakshmi =

ein ind. weiblicher Name, eigentlich der Name von der Göttin Lakshmi, die nach Hindu Tradition als Göttin für „Glück, Schönheit, Reichtum“ usw. verehrt wird.

*** Bandhar =

Affe auf Hindi.

Marwari =

eine ethnische Gruppe in Indien, die die Sprache Marwari spricht.