அனைவருக்குமான நூல்கள்

Indian translations> அனைவருக்குமான நூல்கள்

Bücher für alle (SZ, 31. Juli 2023)

LOTHAR MÜLLER

Lothar Müller

அனைவருக்குமான நூல்கள்

Translated by : Indra Balasubramaniyan

Als Ende der Woche der Schriftsteller Martin Walser starb, zeigten ihn die Bilder zu den Nachrufen oft am Ufer des Bodensees, als knorrigen alten Mann mit Hut, verwachsen mit seiner Herkunftswelt. Wenige Wochen zuvor hatte in Berlin eine Gedenkveranstaltung für den Ende November 2022 verstorbenen Hans Magnus Enzensberger stattgefunden, der 93 Jahre alt geworden war. Nichts wäre leichter, als die beiden in ein Kontrastbild einzuzeichnen.

வார இறுதியில் எழுத்தாளர் மார்டின் வால்சர் இறந்தபோது, இரங்கல் செய்திகளில் இருந்த படங்கள், அவரை கான்ஸ்டன்ட் ஏரியின் கரையில் தொப்பி அணிந்து, சிடுசிடுவென இருக்கும் ஒரு முதியவராகவும், அவரது பூர்வீக உலகத்துடன் இணைந்ததாகவும் காட்டின. சில வாரங்களுக்கு முன்பு, நவம்பர் 2022ன் இறுதியில், மறைந்த, 93 வயதான ஹான்ஸ் மேக்னஸ் என்ட்சென்ஸ்பெர்கருக்கு பெர்லினில் ஒரு நினைவுதினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இருவரையும் மாறுபட்ட கோணத்தில் சித்தரிப்பதை விட வேறு எதுவும் எளிதாக இருக்காது.

Auf der einen Seite der Kosmopolit Enzensberger, der das Deutschsein mit lässiger Geste ausschlägt, in die Nachkriegsgesellschaft die Frischluft der vom NS-Staat verbannten internationalen ästhetischen Moderne einfahren lässt und in seinen Essays demonstriert, wozu kühle, respektlose Intelligenz imstande ist.

ஒரு புறம், சர்வ சாதாரணமாக ஜெர்மனாய் இருப்பதை நிராகரிக்கும், பன்னாட்டோர் வாழும் பெருநகர வாசியான என்ட்சென்ஸ்பெர்கர், நாசி அரசால் தடைசெய்யப்பட்ட சர்வதேச அழகியல் நவீனத்துவத்தின் புதிய காற்றைச் சுவாசிக்க, போருக்குப் பிந்தைய சமுதாயத்தை அனுமதிக்கிறார், மேலும் அவரது கட்டுரைகளில், ஒரு தன்மையற்ற நுண்ணறிவின் திறன் என்ன என்பதையும் நிரூபித்துக்காட்டுகிறார்.

Auf der anderen Seite Martin Walser, der mit seinen Figuren die Neigung zu Selbstzweifel und die Unkontrollierbarkeit der Gefühle teilt, der mit seinem Deutschsein hadert, es aber nie zur Disposition stellt und gegen die deutsche Teilung rebelliert, als sich die Mehrheit der Intellektuellen mit ihr abgefunden hat.

மறுபுறம், சுயசந்தேகத்தின் போக்கையும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாத தன்மையும் தனது கதாபாத்திரங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மற்றும் தனது ஜெர்மனியத்துடன் போராடும் மார்டின் வால்சர், ஒருபோதும் அதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை. மேலும் பெரும்பான்மையான அறிவுஜீவிகள் ஜெர்மன் பிரிவினைக்கு ஒத்துப்போனபோது, இவர் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்.

Aber dieses Kontrastbild unterschlägt, dass Enzensberger, wie er im Alter zunehmend erkennen ließ, die Bindung an seine deutsche Herkunftswelt und Herkunftsfamilie nie aufgab und Walser bereits in den Fünfzigerjahren als Reporter für den Süddeutschen Rundfunk Reisen nach Italien, England, Frankreich, Polen und in die CSSR unternahm, später Dozenturen an Universitäten in den Vereinigten Staaten innehatte und mit „Brandung“ einen quasi amerikanischen Roman in sein Werk einfügte.

ஆனால், என்ட்சென்ஸ்பெர்கர், அவர் வயது முதிர்ந்த காலத்திலும் தனது பூர்வீகத்துடனும், பூர்வீக குடும்பத்துடனுமான தனது உறவுகளைச் சிறிதும் கைவிடவில்லை என்று நிரூபித்ததையும், வால்சர் 1950களில், தெற்கு ஜெர்மனி வானொலியின் நிருபராக இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், போலந்து மற்றும் செக் குடியரசுக்குப் பயணம் மேற்கொண்டதையும், பின்னர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பட்டம் பெற்றதையும், மேலும் "ப்ராண்டுங்"-உடன் தனது படைப்பில் ஒரு அரை அமெரிக்கச் சார்புடைய நாவலை இணைத்ததையும், இந்த மாறுபட்ட சித்தரிப்பு மறைக்கிறது.

Vor allem aber steht Walser wie sein Generationsgefährte Enzensberger für den Take-off des modernen Literaturbetriebs seit den späten Fünfzigerjahren. Für beide fand Literatur nicht lediglich zwischen Buchdeckeln statt, sondern war ein öffentliches Medium, das Geltung in der Gesamtgesellschaft beanspruchen konnte.

எல்லாவற்றிற்கும் மேலாக, வால்சர், அவரது சமகாலத்தவரான என்ட்சென்ஸ்பெர்கரைப் போலவே, 1950களின் பிற்பகுதியிலிருந்து நவீன இலக்கிய உலகின் எழுச்சிக்கு உறுதுணையாய் நின்றார். இருவருக்கும், இலக்கியம் என்பது புத்தக அட்டைகளுக்கு இடையில் மட்டுமே உள்ள ஒரு விஷயமாக இன்றி, ஒட்டுமொத்த சமுதாயத்திலும் மதிப்புமிக்க ஒரு பொது ஊடகமாகவும் இருந்தது.

Beide hatten großen Anteil am Brückenschlag zwischen deutscher Gegenwartsliteratur und öffentlich-rechtlichem Rundfunk, beide sorgten als Mitglieder der „Gruppe 47“ für deren öffentliche Ausstrahlung.

இருவரும் சமகால ஜெர்மன் இலக்கியத்திற்கும், பொது வானொலிக்கும் இடையே பாலம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர், "குரூப்பே 47" இன் உறுப்பினர்களாக இருவரும் அதன் பொது ஒலிபரப்பை உறுதி செய்தனர்.

Beide waren Autoren mit wachem Medienbewusstsein und Networker. Enzensberger entwickelte Medientheorien; Walser, der nicht nur Romancier, sondern auch Theaterautor war, wurde zu einem Virtuosen der physischen Bühnenpräsenz.

இருவரும் ஊடக விழிப்புணர்வு மற்றும் இணையம் (நெட்வொர்க்கர்கள்) கொண்ட ஆசிரியர்கள். என்ட்சென்ஸ்பெர்கர் ஊடகக் கோட்பாடுகளை உருவாக்கினார்; நாவலாசிரியராக மட்டுமின்றி நாடக ஆசிரியராகவும் இருந்த வால்சர், மேடைப் பிரசன்னத்தில் வித்தகர் ஆனார்.

Beide waren deutlich älter als der Kern der 68er-Generation, beide trugen bei zur medialen Infrastruktur und zu den intellektuellen Ressourcen, auf welche die Jüngeren zurückgreifen konnten.

இருவரும் 1968 தலைமுறைகளின் முக்கியமானவர்களை விட குறிப்பிடத்தக்க வகையில் வயதில் மூத்தவர்கள், இருவரும் இளைஞர்களை ஈர்க்கக்கூடிய ஊடகக் கட்டமைப்பு மற்றும் அறிவுசார் வளங்களில் பங்களித்துள்ளனர்.

Walser beobachtete 1964 den Frankfurter Auschwitzprozess, sein Essay, der 1965 in Enzensbergers Kursbuch erschien, enthielt den Satz: „Was Auschwitz war, wissen nur die ‚Häftlinge‘.“

1964 இல் ஃபிராங்க்ஃபுர்ட் ஔஸ்ஷ்விட்ஸ் விசாரணையை வால்சர் தொடர்ந்து கவனித்து வந்தார், 1965இல் என்ட்சென்ஸ்பெர்கரின் பாடப் புத்தகத்தில் வெளிவந்த வால்சரது கட்டுரையில், "ஔஸ்ஷ்விட்ஸ் என்றால் என்னவென்று 'கைதிகளுக்கு' மட்டுமே தெரியும்" என்ற இந்த வாக்கியம் இருந்தது.

Als Walser sich Jahrzehnte später in seiner Paulskirchenrede 1998 mit der Warnung vor einer Ritualisierung und Entleerung des Gedenkens an Auschwitz nicht begnügte, sondern ebenso vage wie unbedacht die „Instrumentalisierung unserer Schande zu gegenwärtigen Zwecken“ argwöhnte, provozierte er den Protest von Ignatz Bubis, des Vorsitzenden im Zentralrat der Juden in Deutschland.

சில தசாப்தங்களுக்கு பிறகு 1998 இல் வால்சர், பால்ஸ் தேவாலயத்தில் நடத்திய தனது உரையில், சடங்குகளுக்கும் ஔஸ்ஷ்விட்ஸ்-ஐப் பற்றிய எண்ணங்களின் வெளியேற்றத்திற்கும் எதிராக விடுத்த எச்சரிக்கையுடன் திருப்தி அடையவில்லை, மாறாகத் தெளிவற்ற நிலையில், சிந்தனையின்றி "தற்போதைய நோக்கங்களுக்காகத் தங்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகச்" சந்தேகித்தார், அவர் ஜெர்மனியில் யூதர்கள் மத்திய கவுன்சிலின் தலைவர் இக்னாட்ஸ் புபிஸின் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தூண்டிவிட்டார்.

Walser, Enzensberger und Grass, aber auch Uwe Johnson, Ingeborg Bachmann, Max Frisch, Thomas Bernhard und andere wurden auch deshalb zu herausgehobenen Figuren, weil das mediale Dreieck von Buchverlagen, Zeitungen und Zeitschriften und Rundfunk zu einem Gewicht der Literatur in der allgemeinen Öffentlichkeit beitrug. Ihre in Gestus und Gehalt unterschiedlichen Interventionen konnten Walser, Enzensberger und Grass auf diesem Sockel noch im wiedervereinigten Deutschland bis ins neue Jahrtausend hinein öffentlichkeitswirksam fortsetzen.

வால்சர், என்ட்சென்ஸ்பெர்கர், கிராஸ், உவே ஜான்சன், இன்கேபோர்க் பாஹ்மன், மாக்ஸ் ஃப்ரிஷ், தாமஸ் பெர்ன்ஹார்ட் மற்றும் பலர் முக்கிய நபர்களானார்கள், ஏனெனில் புத்தக வெளியீட்டாளர்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் வானொலி போன்ற ஊடகங்கள் சாதாரண பொதுமக்களிடையே இலக்கியத்தின் வளத்திற்குப் பெரும் பங்களித்தன. வால்சர், என்ட்சென்ஸ்பெர்கர் மற்றும் கிராஸ் ஆகியோர், புதிய மில்லெனியத்தில், மீண்டும் ஒன்றிணைக்கப்பட்ட ஜெர்மனியிலும், இந்த அடிப்படையில், சைகை மற்றும் உள்ளடக்கத்தில் வேறுபட்ட தங்கள் குறுக்கீடுகளைத் தொடர முடிந்தது.

Nachfolgende Autorengenerationen können in der aktuellen Mediensituation mit einer herausgehobenen Rolle der Literatur in der Öffentlichkeit nicht mehr rechnen. Grass, Enzensberger oder Walser hinterlassen keine Planstellen. Zugleich hat sich seit den Zeiten der „Gruppe 47“ das Profil der Gegenwartsliteratur deutlich verändert. Alle Debattenbegriffe von einst – die Heimat, das Vaterland, die Muttersprache – sind in einer Updatephase.

தற்போதைய ஊடக சூழ்நிலையில், அடுத்து வரும் தலைமுறை எழுத்தாளர்கள், இலக்கியம் மக்களின் பார்வையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கிராஸ், என்ட்சென்ஸ்பெர்கர் மற்றும் வால்சர் எந்த ஒரு நிலையையும் விட்டு வைக்கவில்லை. அதே நேரத்தில், "குரூப்பே 47" காலத்திலிருந்தே தற்கால இலக்கியக் குறிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் மாறிவிட்டன. தாயகம் , தாய்நாடு, தாய்மொழி - போன்ற முந்தைய விவாதச்சொற்கள் அனைத்தும் புதுப்பிக்கும் கட்டத்தில் உள்ளன.

Im Jahr 2015, als Günter Grass starb, erhielt in der Frankfurter Paulskirche der deutsch-iranische Orientalist und Autor Navid Kermani den Friedenspreis des Deutschen Buchhandels.

2015 ஆம் ஆண்டில், க்யுன்டர் கிராஸ் இறந்தபோது, ​​ஜெர்மன்-ஈரானிய கீழ்திசை மொழிப்புலமையாளர் (ஓரியண்டலிஸ்ட்) மற்றும் எழுத்தாளர் நவிட் கெர்மானி ஃபிராங்க்ஃபுர்ட் நகர பால்ஸ் தேவாலயத்தில் ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசைப் பெற்றார்.

Wenige Wochen nach dem Tod Enzensbergers wurde die Schauspielerin und Autorin Emine Sevgi Özdamar mit dem Büchner-Preis ausgezeichnet. Wenige Monate vor Walsers Tod gewann der deutsche Autor Dinçer Güçyeter den Preis der Leipziger Buchmesse. Das sind zufällige Koinzidenzen.

என்ஸென்ஸ்பெர்கர் இறந்த சில வாரங்களுக்குப் பிறகு, நடிகையும் புத்தக ஆசிரியருமான எமினே சேவ்கி ஊஸ்டாமர், ப்யூஷ்னர் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். வால்சர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, ஜெர்மன் எழுத்தாளர் டின்சர் க்யூட்ஷேடர் , லைப்சிக் புத்தகக் கண்காட்சிப் (லைப்சிக் புக் ஃபேர்) பரிசை வென்றார். இவை தற்செயலான நிகழ்வுகள்.

Aber sie sind nur möglich, weil die aktuelle deutsche Gegenwartsliteratur sehr viel erkennbarer die Literatur einer Einwanderungsgesellschaft ist als jene Gegenwartsliteratur, die Grass, Enzensberger oder Walser einmal repräsentierten.

தற்போதைய ஜெர்மன் சமகாலஇலக்கியம், கிராஸ், என்ட்சென்ஸ்பெர்கர் மற்றும் வால்சர் ஆகியோர் ஒரு காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய சமகாலஇலக்கியங்களை விட, புலம்பெயர்ந்த சமூகத்தினரது சமகாலஇலக்கியமாக இருப்பதால் மட்டுமே, இவை அனைத்தும் சாத்தியம்.

Martin Walsers Tod erinnert daran, wie seine Generation die Debatten in Deutschland prägte. Und nun?
Treten jüngere Autorinnen und Autoren ganz unterschiedlicher Herkünfte auf.

மார்டின் வால்சர் மறைவு நினைவூட்டுவது, அவரது தலைமுறை எவ்வாறு ஜெர்மனியில் விவாதங்களை வடிவமைத்தனர் என்பதே. இப்போதோ?

இளம் எழுத்தாளர்கள் முற்றிலும் மாறுபட்ட பூர்வீகத்திலிருந்து தோன்றுவதே.

Glossary

E-mail of the Translator: indraganesh@gmail.com

Mit freundlicher Genehmigung von SZ Süddeutsche Zeitung, Germany